கோழிக்குஞ்சு (விளையாட்டு)

கோழிக்குஞ்சு சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று.

ஒருவர் இடுப்பை ஒருவர் எனப் பிடித்துக்கொண்டு ஆள் தொடர் அடைக்கப்படும். தொடரில் முதலில் உள்ளவர் தாய்க்கோழி. அவருக்குப் பின்னால் இருக்கும் மற்றவர்கள் கோழிக்குஞ்சு. தனியே நிற்கும் ஒருவர் கழுகு. கழுகு தொடரில் இருக்கும் கடைசிக் குஞ்சைத் தொடவேண்டும். கோழி தன் இறக்கைக்குள் குஞ்சுகளைக் காப்பாற்றுவது போல கோழியாக இருப்பவர் தன் இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு கழுகு தொடவிடாமல் தடுப்பார். தொடப்பட்ட குஞ்சு வெளியேற வேண்டும். கடைசி குஞ்சு தொடப்பட்டபின் மறு ஆட்டம்.

மேலும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954