கோழிக் கொற்றனார்

கோழிக் கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 276 எண்ணுள்ள பாடல். கோழி, கோழியூர், பெருங்கோழியூர் என்பன உறையூரைக் குறிக்கும் பெயர்கள்.

பாடல் சொல்லும் செய்தி

தொகு

களவு ஒழுக்கத்தில் இருக்கும் தலைவன், தன் தலைவியைத் தோழி வாயிலாக அடைவான். முடியாவிட்டால் மடலேறிப் பெறுவது வழக்கம். இந்தத் தலைவன் தோழியை மிரட்டுகிறான். அரசனிடம் சொல்லி முறையிட்டுப் பெறுவேன் என்கிறான்.

அவள் குறுமகள், மூங்கில் போன்ற தோளை உடையவள். பாவைப் பொம்மை செய்து அவளோடு நான் விளையாடினேன். கோரைப்புல் மெத்தையில் படுத்துக் கிடந்தோம். அவளது முலைமேல் தொய்யில் எழுதினேன். அந்தத் தொய்யில் அழியாமல் காப்பாற்றினேன். இவையெல்லாம் யாருக்கும் தெரியாது. (இப்போது நீ என் காதலியை(தலைவியை) எனக்குத் தராவிட்டால் 'முறையுடை அரசன் செங்கோல் அவையத்து முறையிடுவேன்'. அஃது அவளது பேதைத் தன்மைக்குத் தக்கது அன்று. ஊருக்கும் நல்லதன்று - என்கிறான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோழிக்_கொற்றனார்&oldid=3211498" இலிருந்து மீள்விக்கப்பட்டது