கோவர்தன் குமாரி
கோவர்தன் குமாரி (Govardan Kumari) என்பவர் ஓர் இந்திய நாடுப்புற நடனக்கலைஞர் ஆவார். இராசமாதா என்று பிரபலமாக அறியப்படும் இவர் இராசத்தானின் கூமார் என்ற பாரம்பரிய நாட்டுப்புற நடனத்தை ஆடுவதற்கும் அதை மற்றவர்களுக்கு கற்பிப்பதற்கும் முழு முயற்சிகள் மேற்கொண்டவராவார் [1]. மும்பையை மையமாகக் கொண்ட காங்கோர் கூமார் நடனப் பள்ளியை தன் தலைமையில் இவர் தொடங்கினார் [2]. இந்நடனப்பள்ளியின் ஆதரவுடன் மாணவர்கள் பல்வேறு நடன மற்றும் கலாச்சார விழாக்களில் பங்கேற்பதற்கு பெரிதும் உதவியிருக்கிறார் [3], கத்தார் தேசிய அரங்கில் செப்டம்பர் 2010 இல் நடைபெற்ற அரபு நாகரிகத்தின் தலைநகர விழாவான 2010 தோகா திருவிழாவிலும் இவரது மாணவர்கள் பங்கேற்றார்கள் [4]. கூமார் நடனத்தின் ராச்வடி பாரம்பரியத்திற்கு இவரது முயற்சிகள் புத்துயிர் அளித்தன. இராசத்தானின் மாநிலத்தின் கிசாங்கார் நகரின் மற்றொரு நாட்டுப்புற நடனமான சாரி நடனத்தையும் பிரபலப்படுத்த உதவின [5]. இந்திய அரசாங்கம் இராசமாதாவின் கலைச் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் விதமாக இவருக்கு 2007 ஆம் ஆண்டில், நான்காவது மிக உயரிய விருதான பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது [6].
கோவர்தன் குமாரி Govardan Kumari | |
---|---|
பிறப்பு | சாந்திராம்பூர், பஞ்சமகால் மாவட்டம், குசராத்து, இந்தியா |
பணி | நாட்டுப்புற நடனக் கலைஞர் நடனக்கலை வல்லுநர் நடன ஊக்குநர் |
அறியப்படுவது | நடனக் கலைஞர் |
விருதுகள் | பத்மசிறீ |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Image Details". India Today. June 6, 2007. பார்க்கப்பட்ட நாள் August 25, 2016.
- ↑ "Rajmata Goverdhan Kumari". Indian Institute of Management, Ahmedabad. 2016. Archived from the original on நவம்பர் 17, 2015. பார்க்கப்பட்ட நாள் August 25, 2016.
- ↑ "Timeout". The Telegraph. August 28, 2006. பார்க்கப்பட்ட நாள் August 25, 2016.
- ↑ "Ambassador happy with opportunity for artistes". Doha.biz. September 25, 2010. பார்க்கப்பட்ட நாள் August 25, 2016.
- ↑ "Manch Pravesh and Arangetram". Mago College Girls School. 2016. பார்க்கப்பட்ட நாள் August 25, 2016.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2013. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் August 20, 2016.