கோவலனின் காதலி (திரைப்படம்)

கோவலனின் காதலி 2014 பெப்ரவரியில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தை கே. அர்சூன் ராஜா இயக்கியுள்ளார்.[1] திலீப் குமார், கிரண்மை, கஞ்சா கருப்பு போன்ற பலர் நடித்துள்ளனர்.

கோவலனின் காதலி
இயக்கம்கே. அர்சூன் ராஜா
இசைபாரதி கே
நடிப்புதிலீப் குமார்
கிரண்மை
ஒளிப்பதிவுசிவசங்கர்
வெளியீடு2014 பெப்ரவரி
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

திலீப் குமாரும், கிரண்மையும் பாண்டிச்சேரியில் ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். திலீப் குமாருக்க கிரண்மை மீது ஒருதலைக் காதல். ஆனால் கிரண்மை ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் காதல் என்பதை நினைக்காமல் இருந்து வருகிறார். வறுமையால் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்தப் பணம் இல்லாமல் தவிக்கிறார் கிரண்மை. அப்போது அவரின் தோழி, பெரிய செல்வந்தர்களின் ஆசைக்கு இணங்கினால் நிறையப் பணம் கிடைக்கும், அதன்மூலம் கல்லூரிப் படிப்பையும் தொடரலாம், மகிழ்ச்சியாகவும் வாழலாம் என யோசனை கூறுகிறாள்.

முதலில் மறுக்கும் கிரண்மை, பிறகு இதற்குச் சம்மதிக்கிறாள். ஒரு தரகரைக் கிரண்மைக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார் அவருடைய தோழி. அந்த தரகர் ஒருநாள் கிரண்மையைத் தொழிலதிபரான கசம்கானிடம் அனுப்பி வைக்கிறார். அங்கு சென்று தனது பிரச்சினையைக் கூறும் கிரண்மையை ஆறுதல்படுத்துகிறார் கசம்கான். அவரின் அரவணைப்பு, பண மோகம் கிரண்மையை கிறங்கவைக்க அவருடைய ஆசைக்கு இணங்குகிறாள். கசம்கானும் இவளென்றால் உயிராய் இருக்கிறார். இருவரும் பாண்டிச்சேரி முழுவதும் ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள்.

ஒருநாள் கிரண்மையை காதலிக்கும்படி திலீப்குமார் தொந்தரவு செய்ய, இதை கிரண்மை கசம்கானிடம் கூறுகிறாள். கசம்கான் அந்த ஊரின் குப்பத்து தலைவரான ‘காதல்’ தண்டபாணி உதவியுடன் திலீப்குமாரைக் கொலை செய்கிறார். இந்நிலையில், இவர்களுடைய நெருக்கத்தின் பலனாக கிரண்மை கர்ப்பமாகிறார். மருத்துவரிடம் சென்று கர்ப்பத்தைக் கலைக்க முயற்சிக்கிறார் கிரண்மை. ஆனால், 5 மாதங்கள் ஆகிவிட்டதால் கர்ப்பத்தைக் கலைக்க முடியாது என மருத்துவர் கூறிவிடுகிறார்.

இந்நிலையில், கசம்கான்-கிரண்மைக்குண்டான தொடர்பு கசம்கானின் வீட்டுக்கு தெரிய வருகிறது. இதை எதிர்க்கும் கசம்கானின் மனைவியும், மகளும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அவரை மிரட்டுகிறார்கள். இறுதியில் கிரண்மையை கைவிட்டு விடுவதாக அவர்களிடம் உறுதிகூறுகிறார் கசம்கான்.

யாருடைய அரவணைப்பும் இன்றி தனிமையில் விடப்பட்ட கிரண்மையின் வாழ்க்கை அதன்பிறகு என்னவாயிற்று என்பதே மீதிக்கதை.

மேற்கோள்கள்

தொகு
  1. http://cinema.maalaimalar.com/2014/02/07162959/kovalanin-kadhali-cinema-revie.html