கோவிந்தா
கோவிந்தா (Govind Arun Ahuja) ஒரு பிரபல இந்திய நடிகர். 1963 டிசம்பர் 21 ல் பிறந்தார். மும்பையில் வசிக்கிறார். 1985 இல் இருந்து நடித்து வருகிறார். 140க்கு மேற்பட்ட இந்திப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இறுதியாக, 2009-இல் லைப் பார்ட்னர் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். இவர் பிலிம்பேர் விருது, சீ சினி விருது உள்ளிட்ட விருதுகளைப் பல முறை பெற்றவர். இவற்றில், 2000 ஆம் ஆண்டில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்டி நம்பர் 1, ஜோடி நம்பர் 1, பேட்டி நம்பர் 1, ராவண், சாண்ட்விச், ஜெண்டில்மேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தவர் என்ற பெருமை உண்டு.
கோவிந்தா | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 21, 1963 மும்பை |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சுனிதா கோவிந்த் அகுஜா |
பிள்ளைகள் | ஒரு மகன், ஒரு மகள் |
வாழிடம் | மும்பை |