கோவிலூர் செல்வராஜன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கோவிலூர் செல்வராஜன் (Koviloor Selvarajan) ஒரு ஈழத்து பாடகர், நடிகர், கவிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியர்.இலங்கை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும்,பல்துறைக் கலைஞராகவும் இருந்தவர். இவரது இயற்பெயர் செல்வராஜன் இராசையா. இவரது முதலாவது சிறுகதை விடியாத இரவுகள். இவர் கிழக்கு மாகாணம்,அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில் என்னும் ஊரிலே 18.09.1952 ல் பிறந்தவர். வாழ்ந்தவர். ஆரம்பக் கல்வியை திருக்கோவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும்,பாடசாலைக் கல்வியை திருக்கோவிலில் இருக்கும் தம்பிலுவில் மகாவித்தியாலதிலும் உயர் கல்வியை மட்டக்களப்பிலும்,கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் படிப்பை மேற்கொண்டு கலைமாணிப் பட்டம் பெற்றவர்.
இவர் பற்றி
தொகுஇவர் இலங்கை வானொலியில் பல நாடகங்களில் பங்கேற்று நடித்துள்ளார். வானொலிப் பாடகராக இருந்ததோடு, இசையமைப்பாளராகவும் திகழ்ந்தார். இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் விளங்கினார். தினகரன் பத்திரிகையில் இவரது படகுத்துறை அருகினிலே – 1975, லாவண்யா ஒரு முற்றுப்புள்ளி – 1976, இளமைக் கோவில் ஒன்று – 1977 ஆகிய நாவல்களை எழுதினார். சிந்தாமணி, வீரகேசரி, லண்டன் - மேகம், நோர்வே – பறை, பாரிஸ் - ஈழநாடு, ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.இவர் 1990 ல் புலம்பெயர்ந்து நோர்வே நாட்டுக்கு சென்றவர்.அங்கும் தமிழ் வானொலிகளில் பணிபுரிந்துள்ளார்.பல இறு வட்டுகளை வெளியிட்டுள்ளார். தாயக உணர்வுப்பாடல்கள் பலவற்றை எழுதிப் பாடி தேசத்தின் தென்றல் என்ற பெயரில் இறு வட்டாக வெளியி ட்வர்.இவர் பல சிறுகதை நூல்களையும்,கட்டுரை நூல்களையும்,நாவல்களையும் கவிதை தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ளார்.இந்த நூல்கள் தாயகத்திலும்,ஐரோப்பிய நாடுகளிலும்,மற்றும் கனடா,அவுஸ்த்ரேலியா போன்ற நாடுகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.இவரது கலை இலக்கிய ஒலிபரப்பு,இசை வாழ்கையின் ஐம்பது ஆண்டுகள் நிறைவை பொன்விழாவாக மட்டக்களப்பு தமிழ்ச்சங்கம் ஒரு பொன்விழா மலரை 2023 ம் ஆண்டு ஜுன் மாதம் வெளியிட்டு கொண்டாடியது. கொழும்பு தமிழ்ச்சங்கம் அதை அறிமுகம் செய்தது.இந்த "இலக்கியத் தென்றல் "என்ற பொன்விழா மலர் ஐரோப்பிய நாடுகளிலும்,கனடாவிலும் அறிமுகம் செய்யப்பட்டன. இவருக்கு உலகளாவிய ரீதியில் பல விருகள் வழங்கப்பட்டுள்ளன
விருதுகள்
தொகு- மென்னிசைக் கவிஞர் ஜெர்மனி தமிழ் மன்றம்- 1994
- புலம்பெயர்ந்தோருக்கான தந்தை செல்வா விருது 1996
- விடியாத இரவுகள் - லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு, பணமுடிப்பும் - 1997
- வெள்ளிவிழா கலைஞர் விருது நோர்வே தமிழர் இணைவுகூடம் 1999
- முத்தமிழ் வாருதி அரியநாயகம் விருது.திருக்கோவில் 2000
- முத்தமிழ் காவலர் தமிழினி விருது இலண்டன். 2008
- கவிதைக் காவியர்,இலண்டன் ஸ்கைடோன் கிறிஸ்தவ இணையம் 2012
- திருவூர்க் கவிராயர்,விருது கனடா கிழக்கிலங்கை தமிழர் அமைப்பு.2013
- பல்துறைக் கலைஞர் .கனடா உதயன் சிறப்பு சர்வதேச விருது. 2017
- வாழ்நாள் சாதனையாளர் விருது அவுஸ்த்ரேலியா அக்கினிக்குஞ்சு 2019
- சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது. தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி அறக்கட்டளை.2022