கோஸ்ட் (மென்பொருள்)
கோஸ்ட் எனப்படுவது ஒரு கட்டற்ற திறந்தமூல இணையம் சார் வலைப்பதிவு மென்பொருளாகும். தற்பொழுது சந்தையில் உள்ள பல வலைப்பதிவு மென்பொருட்கள் சாதாரண வலைப்பதிவு இயல்பைத் தவிர மேலம் பல செயற்பாடுகளைக் கொண்டமைந்துள்ளது. இதன் மூலம் புதிதாக வலைப்பதிவுத் துறைக்குள் நுழையும் பயனர்கள் அசௌகரியம் அடைகின்றனர். இதைத் தவிர்த்து வலைப்பதிவிற்கு இலகுவான இடைமுகத்தைக் கொண்டமைந்ததான ஒரு மென்பொருளை அமைக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டது [1].
கோஸ்ட் வலைப்பதிவு மென்பொருள் | |
உருவாக்குனர் | கோஸ்ட் |
---|---|
தொடக்க வெளியீடு | அக்டோபர் 14, 2013 |
இயக்கு முறைமை | |
உரிமம் | திறந்தமூலக் கட்டற்ற மென்பொருள் |
இணையத்தளம் | ghost.com |
வரலாறு
தொகு2012இன் இறுதிகளில் ஜோன் ஓ'நோலன் எனும் மென்பொருள் வடிவமைப்பாளர் ஒரு வலைப்பதிவை எழுதினார்[2]. இதில் நிறுவல், பராமரிப்பு சிக்கல்மிக்கதாக மாறிவிட்ட வலைப்பதிவு மென்பொருட்களுக்கு ஈடாகப் புதிய ஒரு மென்பொருளை எழுத வேண்டிய தேவை பற்றி அறிவித்தார். இந்தப் பதிவு எழுதப்பட்டு சில நாட்களிலேயே பல ஆயிரக்கணக்கானோர் அந்தப் பக்கத்திற்கு விரைந்து வந்தனர். இதன் மூலம் இந்தப் புதிய முயற்சிக்குப் பெரும் ஆதரவு இருப்பதை ஜோன் ஓ'நோலன் அறிந்துகொண்டார்.
ஆறுமாதங்களின் பின்னர் கோஸ்ட் முதல் பதிப்பு கிக்ஸ்டாட்டர் பொதுமக்களிடம் இருந்து பணம் சேர்த்துக்கொள்ளும் தளத்தின் மூலம் அறிவிக்கப்பட்டு மூதல் 48 மணி நேரங்களிலேயே சுமார் $100,000 டாலர்களை சேர்த்துக்கொண்டது[3].
14 அக்டோபர் 2013, கோஸ்ட் மென்பொருள் பயனர் பயன்பாட்டிற்காக பொதுவில் வெளியிடப்பட்டது [4]. அன்று முதல் மென்பொருளின் மூலம் கிட்கப் தளத்தில் பொதுவில் கிடைக்கப்பெறுகின்றது [5].
தொழில்நுட்பம்
தொகுகோஸ்ட் பிரபலமாக வேர்ட்பிரசு மென்பொருள் போலல்லாது நோட்ஜேஎஸ் மற்றும் மொக்கோடீபி அல்லது எஸ்கியூஎல் லைட் தொழில்நுட்பங்களில் தங்கியிருக்கின்றது. இந்த தொழில் நுட்பங்களின் வேகம் காரணமாக கோஸ்ட் மென்பொருள் இயக்க வேகம் அதிகமாக உள்ளதாகக் கூறபடுகின்றது.
வரவேற்பு
தொகுகோஸ்ட் வலைப்பதிவு மென்பொருள் வேகமாகப் பல பயனர் மத்தியில் பரவி வந்தாலும் கோஸ்ட் நிறுவத் தேவையான உட்கட்டுமானம் பல வழங்கிகளில் இல்லை. குறைந்தபட்சம் மெய்நிகர் தனியுரிமைய வழங்கிகள் போன்ற சேவைகளை நாட வேண்டிய தேவை பயனர்களுக்கு உள்ளது. ஆயினும் கோஸ்ட் செயலியை எழுதும் நிறுவனம் பல்வேறு வழங்கி வழங்குனர்களுடன் இணைந்து கோஸ்ட் மென்பொருள் நிறுவலை இலகுவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இதைவிட கோஸ்ட் நிறுவனம் தமது சொந்த வழங்கிகளில் இயங்கும் வலைப்பதிவுகளையும் பயனர்களுக்கு வழங்க ஆரம்பித்துள்ளனர்[6].