கோ. இலட்சுமணன்

அரசியல்வாதி

கோ. இலட்சுமணன் (Govindaswamy Lakshmanan 12 பெப்ரவரி 1924 - 10 சனவரி 2001) இந்திய அரசியல்வாதி தொழிற்சங்கவாதி, சமூகச் செயற்பாட்டாளர், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1]

வாழ்க்கைக்குறிப்பு தொகு

தஞ்சை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த இலட்சுமணன் பள்ளிப் படிப்பு மற்றும் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் நடுவணரசுப் பணியில் சேர்ந்தார். பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்தால் வேலையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். அரசியலில் ஈடுபாடு கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார்.

அரசியல் பணி தொகு

  • 1980 இல் வடசென்னைத் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • முன்னதாக 1974 முதல் 1980 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
  • 1980 முதல் 1984 வரை மக்களவையில் உதவி சபாநாயகராகப் பதவி வகித்தார்.
  • மேற்கு செருமனி இங்கிலாந்து போன்ற நாடுகளில் பயணம் செய்துள்ளார்.

மறைவு தொகு

மாரடைப்பு காரணமாக, சனவரி 10, 2001 அன்று தனது 78 வயதில் காலமானார்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._இலட்சுமணன்&oldid=3551933" இருந்து மீள்விக்கப்பட்டது