கோ ஜமாலோ

சிந்தி கலாச்சாரத்தில் தொடர்புடைய நடன வகை

" கோ ஜமாலோ " என்பது சிந்தி மொழி நாட்டுப்புற பாடல் மற்றும் சிந்தி கலாச்சாரத்தில் தொடர்புடைய நடன வகை ஆகும். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உள்ளூர் நாட்டுப்புற நாயகனான '''ஜமாலோ கோசோ பலோச்'''சைப் பற்றிய பாடல்களை கொண்ட நடனமாகும். இந்த பாடல்கள் 1947 முதல் மீண்டும் பிரபலமடைந்து, அபிதா பர்வீன் என்பவரால், சிந்தி மொழியிலும் ஷாஜியா குஷ்க் என்பவரால், உருது மொழியிலும் பதிவு செய்யப்பட்டது.

பாகிஸ்தானின் கோக் கலைவினையரங்கதால் நடத்தப்பட்ட 11 வது நிகழ்ச்சியில் அலி சேத்தி மற்றும் ஹுமைரா அர்ஷாத் ஆகியோரால் கோ ஜமாலோ பாடல் பஞ்சாபி மொழியில் மறுபதிப்பக பாடப்பட்டது [1]

கோ ஜமாலோவின் வரலாறு தொகு

கோ ஜமாலோ வைப்பற்றிய பல குறிப்புகள் வரலாற்றின் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கதைகளில் ஒன்று என்ன கூறுகிறதென்றால், சிந்துவின் மேற்கு பகுதிகளில் ஓரிடத்தில் கடுமையான போர் நடந்ததாகவும், அப்பகுதியில் வசிப்பவர்கள் படையெடுப்பாளர்களுக்கு எதிராக பல்வேறு தீவிர சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொண்டதாகவும் கூறுகிறது. இந்த நேரத்தில், மிகவும் துணிச்சலான மற்றும் தைரியமான ஜமாலோ என்ற நபர், படையெடுப்பாளர்களுக்கு எதிராக ஒரு வலிமையான ஆனால் சிறிய இராணுவத்தை வழிநடத்தினார். அந்த சிறு படையை வைத்துக்கொண்டு கடுமையான மற்றும் இரத்தக்களரிமிக்க போராட்டத்தை நிகழ்த்தி கடைசியில் அவர் வெற்றி பெற்றார். அவர்கள் வெற்றி பெற்று தங்கள் நகரங்களுக்கு திரும்பி வரும் போது, அப்பகுதி பெண்கள் ஹோ ஜமாலோ, காதி ஆயோ கைர் சான் என்று மகிழ்ச்சியாக பாடிக்கொண்டு அவர்களை எதிர்கொண்டனர்.அதன் மொழிபெயர்ப்பு: ஓ பெரிய ஜமாலோ, நீங்கள் எந்த இழப்பையும் சந்திக்காமல் வெற்றி பெற்றீர்கள் என்பதாகும்.. [2]

மேலும் பார்க்கவும் தொகு

  • சிந்தி கலாச்சாரம்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ_ஜமாலோ&oldid=3657861" இலிருந்து மீள்விக்கப்பட்டது