கோ மாக் (Ko Mak) (Thai: เกาะหมาก, உச்சரிப்பு [kɔ̀ʔ màːk]) என்பது தாய்லாந்து நாட்டின் திராத் மாகாணத்திலுள்ள ஒரு சிறிய தீவு ஆகும். பாக்கு இங்கு அதிகம் கிடைப்பதால் இப்பெயர் பெற்றது.

கோ மாக்
Ko Mak

เกาะหมาก
தீவு
Ko Mak
தீவின் இருப்பிடம் திராத் மாகாணம்
தீவின் இருப்பிடம் திராத் மாகாணம்
நாடு தாய்லாந்து
மாகாணம்திராத்
அமைவிடம்கோ குத்
நேர வலயம்தாய்லாந்து (ஒசநே+7)
அஞ்சல் குறியீடு23000
Geocode230504

வரலாறு தொகு

ஐந்தாம் ராமா அரசரின் ஆட்சிக்காலத்தில் சீன விவகாரங்களின் அலுவலராக இருந்த சாவோ சுவா செங் என்பவரே இத்தீவில் முதன்முதலில் குடியேறியவர் ஆவார். இங்கு முதலாவது தென்னை மரம் வைத்து உருவாக்கியவரும் இவரேயாகும். பின்னர் இந்த தென்னைகளை லுவாங் புரொம்பாக்டீ என்ற மற்றொரு சீன விவகாரங்கள் அலுவலருக்கு விற்பனை செய்தார். இவருக்கு பின் வந்தவர்கள் இன்றுவரை அந்நிலத்தை சொந்தமாக வைத்துகொண்டு பாதுகாத்து வருகிறார்கள். லுவாங் புரொம்பாக்டீ மற்றும் அவரது குழந்தைகள் இவ்விளை நிலத்தில் முழுவதும் மேலும் தென்னை மற்றும் இரப்பர் மரங்கள் நட்டு பராமரித்து ஏற்றுமதியும் செய்ததாகவும் அறியப்படுகிறது. [1]


தீவில் சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான முதல் முயற்சி 1974 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தீவின் கிழக்கு பகுதியிலுள்ள பான் ஔ நித்தில் புதிய பங்களாக்கள் கட்டப்பட்டன. உள்கட்டமைப்பு, குறிப்பாக போக்குவரத்து வசதிகளும் தகவல் பரிமாற்ற வசதிகளும் தொடக்க நிலையிலேயே இருந்ததன் விளைவாக கோ மாக் தீவில் சுற்றுலாத் தொழிற்துறை நிறுவப்பட மேலும் சில காலம் பிடித்தது. 1987 ஆம் ஆண்டில் சில கடற்கரைகளும் நிலப்பகுதிகளும் தூய்மைப் படுத்தப்பட்டு உல்லாச விடுதிகள் கட்டப்பட்டன.[1]

அரசியல் வரலாறு தொகு

முதலில் கோ குத் மாவட்டப் பகுதியானது துணை மாவட்டப்பகுதிகளான (தாம்போன்) கோ சாங், இலாயெம் ஙொப் மாவட்டங்களின் பகுதியாக இருந்தது. 1952 ஆம் ஆண்டில் முழு தீவையும் ஒருங்கிணைத்து கோ மாக் துணை மாவட்டம் நிறுவப்பட்டது. அச்சமயத்தில் நான்கு கிராமங்களாக (மூபான்) மேலும் துணைப்பகுப்பு செய்யப்பட்டிருந்தது.[2] 1980 ஆம் ஆண்டில் அதிலிருந்து மூன்று கிராமங்கள் பிரிக்கப்பட்டு கோ குத் என்ற துணை மாவட்டம் உருவாக்கப்பட்டது.[3] 1990 ஏப்ரல் முதல் நாளில் கோ குத் துணை மாவட்டத்தை கோ மாக் துணை மாவட்டத்துடன் இணைத்த அரசாங்கம் அதையொரு சிறுபான்மை மாவட்டமாக (அரச ஆம்பொ) மாற்றியது. [4]

2007 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாளில் தாய்லாந்து அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து அனைத்து 81 சிறுபான்மை மாவட்டங்களும் முழுமையான மாவட்டங்களாக மேம்படுத்தப்பட்டன.[5]இம்மேம்பாடு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக ஆகத்து 24 அரசு செய்தி இதழில் வெளியிடப்பட்டது.[6]

இரண்டு துணை மாவட்ட நிர்வாக அமைப்புகளை முறையே 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் உள்ளூர் அரசாங்கம் உருவாக்கியது. கோ குத் துணைமாவட்ட மன்றம் 2003[7] ஆம் ஆண்டிலும் கோ மாக் 2004 ஆம்[8] ஆண்டிலும் துணை மாவட்ட நிர்வாக அமைப்புகளாக மேம்படுத்தப்பட்டன.

புவியியல் தொகு

தாய்லாந்து வளைகுடாவிற்கு கிழக்கில், பெருநிலப்பகுதியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் கோ மாக் தீவு இருக்கிறது. திராத் மாகாணத்தில் கோ சாங் மற்றும் கோ குத் தீவுகளுக்கு அடுத்து மூன்றாவது பெரிய தீவாக கோ மாக் விளங்குகிறது. 16 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இத்தீவில் 27 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை இருக்கிறது. பல மணற்பாங்கான கடற்கரைகளும் சில குன்றுகளும் இத்தீவிற்கு அழகு சேர்க்கின்றன.[9] தீவில் உள்ளூர் மக்கள் 800 பேர் வசிக்கின்றனர். ஐக்கிய இராச்சியத்தின் சன்டே டைம்சு பத்திரிகை, 2006 ஆம் ஆண்டில் மிக அழகான 10 கடற்கரைகள் என்ற பட்டியலில் இத்தீவையும் சேர்த்துள்ளது.[10] ஒரு கோயில், ஒரு தொடக்கப்பள்ளி, மூன்று மீன்பிடி கிராமங்கள், ஒரு சந்தை மற்றும் ஒரு உடல்நலக் காப்பகம் ஆகியன கோ மாக் தீவில் காணப்படுகின்றன.[1]

தாழ் அலைகள் வந்து போகும் காலத்தில் அருகில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோ காம் என்ற சிறிய தீவிற்கு இங்கிருந்து நடந்தே செல்ல முடியும்.

நிர்வாகம் தொகு

கோ குத் மாவட்டத்தின் ஒரு பகுதியாக கோ மாக் தீவு உருவானது. இம்மாவட்டம் இரண்டு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு மேலும் எட்டு கிராமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துணை மாவட்டத்திற்கும் ஒவ்வொரு துணை மாவட்ட நிர்வாக அமைப்பு உண்டு.[11]

எண். பெயர் தாய்லாந்து மொழியில் கிராமங்கள் குடியிருப்பு.
1. கோ மாக் เกาะหมาก 2 403
2. கோ குத் เกาะกูด 6 1,715

சுற்றுலா தொகு

நீல நிறத்திலான தூய்மையான தண்ணீர் மற்றும் தூய்மையான மணற் கடற்கரைகளால் கோ மாக் தீவு சுற்றுலாப் பயணிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளது. சிறியதும் தட்டையானதுமான இத்தீவின் கடற்கரை நெடுகிலும் தென்னை மரங்களும் மாங்குரோவ் மரங்களும் எழில் கொஞ்ச அமைந்திருக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் தங்கி ஒய்வெடுக்க இங்கு தோராயமாக 25 உல்லாச விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அருகில் உள்ள கோ காம் மற்றும் கோ பை தீவுகளுக்கு எளிதாகப் பயணம் செய்ய வாடகைப் படகுகளும் உண்டு.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "kohmak.com". kohmak.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-09.
  2. (in Thai) (PDF)Royal Gazette 69 (43 ง): 2008–2009. 8 July 1952. http://www.ratchakitcha.soc.go.th/DATA/PDF/2495/D/043/2008.PDF. பார்த்த நாள்: 29 நவம்பர் 2015. 
  3. (in Thai) (PDF)Royal Gazette 97 (150 ง): 3391. 30 September 1980. http://www.ratchakitcha.soc.go.th/DATA/PDF/2523/D/150/3391.PDF. பார்த்த நாள்: 29 நவம்பர் 2015. 
  4. (in Thai) (PDF)Royal Gazette 109 (25 ง): 1351. 13 February 1990. http://www.ratchakitcha.soc.go.th/DATA/PDF/2533/D/025/1351.PDF. பார்த்த நாள்: 29 நவம்பர் 2015. 
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in Thai). Manager Online இம் மூலத்தில் இருந்து 2011-05-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110516212636/http://www.manager.co.th/Politics/ViewNews.aspx?NewsID=9500000055625. 
  6. (in Thai) (PDF)Royal Gazette 124 (46 ก): 14–21. 24 August 2007. http://www.ratchakitcha.soc.go.th/DATA/PDF/2550/A/046/14.PDF. பார்த்த நாள்: 29 நவம்பர் 2015. 
  7. (in Thai) (PDF)Royal Gazette 120 (พิเศษ 146 ง): 20. 22 December 2003. http://www.ratchakitcha.soc.go.th/DATA/PDF/00134862.PDF. பார்த்த நாள்: 29 நவம்பர் 2015. 
  8. (in Thai)Royal Gazette 121 (พิเศษ 64 ง): 7–8. 9 June 2004. http://www.ratchakitcha.soc.go.th/DATA/PDF/0E/00142638.PDF. பார்த்த நாள்: 29 நவம்பர் 2015. 
  9. "Ko Mak_Thailand - Hotels - Tours in Thailand - Maps - Thailand Product,OTOP". Thailand.com.co. 2011-12-18. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2014-08-09.
  10. "Koh Mak: Thailand's Best Kept Secret". Goodtime-resort.com. 2014-06-20. Archived from the original on 2019-07-11. பார்க்கப்பட்ட நாள் 2014-08-09.
  11. "Island History". Kohmak.co.uk. Archived from the original on 2013-08-18. பார்க்கப்பட்ட நாள் 2014-08-09.

புற இணைப்புகள் தொகு

  •   விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Ko Mak
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ_மாக்&oldid=3708047" இலிருந்து மீள்விக்கப்பட்டது