கோ (நிரலாக்க மொழி)
இது ஒரு கணிய நிரல் மொழியாகும்.
கோ (Go) என்பது எளிமையான, நம்பகமான, வினைத்திறன் மிக்க மென்பொருள்களை உருவாக்குவதற்கான கூகுளால் வளர்த்தெடுக்கப்பட்ட திறந்த மூல நிரலாக்க மொழி ஆகும்.[2]
தோன்றிய ஆண்டு: | 2009 |
---|---|
வடிவமைப்பாளர்: | இராபர்ட்டு கிரீசெமேர் இராபு பைக்கு கென் தாம்ப்சன் |
வளர்த்தெடுப்பாளர்: | கூகுள் |
அண்மை வெளியீட்டுப் பதிப்பு: | பதிப்பு 1.1.2[1] |
அண்மை வெளியீட்டு நாள்: | 13 ஆகத்து 2013 |
பிறமொழித்தாக்கங்கள்: | சி, இலிம்போ, மொடியூலா, நியூற்குவீக்கு, ஒபெரோன், பாசுக்கல், பைதான் |
கோப்பு நீட்சி: | .go |
இயக்குதளம்: | இலினக்சு, மாக் இயங்குதளம் எக்சு, விரீ பி. எசு. டி., ஓப்பன் பி. எசு. டி., மைக்ரோசாப்டு விண்டோசு, பிளான் 9 |
இணையதளம்: | www |
இராபர்ட்டு கிரீசெமேர், இராபு பைக்கு, கென் தாம்சன் ஆகியோர் செப்டம்பர் 21, 2007 இல் கோவுக்கான தொடக்க வடிவமைப்பை உருவாக்கத் தொடங்கினாலும் நவம்பர் 2009 இல் கோ அலுவல் முறையாக அறிவிக்கப்பட்டது.[3]
நோக்கங்கள்
தொகுஇயங்குநிலை மொழியின் எளிமையுடன் தொகுப்பிக்கும் மொழிகளின் வினைத்திறனையும் வழங்குதலே கோவின் நோக்கமாகும். கோவின் ஏனைய நோக்கங்கள் பின்வருமாறு:-
- பாதுகாப்பை வழங்குதல் (தட்டச்சுப் பாதுகாப்பும் நினைவகப் பாதுகாப்பும்)
- தொடர்பாடலுக்கான சிறந்த ஆதரவை வழங்குதல்
- கூடிய வேகத்தில் தொகுப்பித்தல்[4]
எடுத்துக்காட்டுகள்
தொகுஉலகே, வணக்கம்
தொகுகோவில் உலகே, வணக்கம் செய்நிரல் பின்வருமாறு:-
package main
import "fmt"
func main() {
fmt.Println("உலகே, வணக்கம்")
}
எதிரொலி
தொகுகோவில் எதிரொலிக் கட்டளைக்கான செய்நிரல் பின்வருமாறு:-
package main
import (
"os"
"flag" // command line option parser
)
var omitNewline = flag.Bool("n", false, "don't print final newline")
const (
Space = " "
Newline = "\n"
)
func main() {
flag.Parse() // Scans the arg list and sets up flags
var s string
for i := 0; i < flag.NArg(); i++ {
if i > 0 {
s += Space
}
s += flag.Arg(i)
}
if !*omitNewline {
s += Newline
}
os.Stdout.WriteString(s)
}