கௌதல மாடன் கதை
கௌதல மாடன் கதை என்பது நாட்டார் கதைப்பாடல்களில் சொல்லப்பெறுகின்ற கதையாகும். இக்கதை பெண்ணை காக்க மரணத்தை தழுவுகின்ற ஆணைப் பற்றியது. சாதி மதம் பாராது மனிதத்தினை போற்றும் கதையாக உள்ளது. [1]
கதைச் சுருக்கம்
தொகுதயிர் விற்க செல்லும் சக்கிலிப் பெண்ணான பூவாயியை ஒரு காமுகன் வன்புணர்வு செய்ய முற்படுகிறான். அவள் இசுலாமிய இளைஞனிடம் தன்னை காக்க வேண்டுகிறாள். அவனும் காப்பாற்றுகிறான். ஒருநாள் காமுகனுக்கும் இளைஞனுக்கும் மோதல் வருகிறது. அதில் இருவரும் இறந்து போகிறார்கள். தன்னை காப்பாற்ற இளைஞன் முனைந்து அதனால் இறந்ததால், பூவாயி தற்கொலை செய்து கொள்கிறாள்.