கௌரி விரதங்கள்
கௌரி விரதங்கள் என்பவை சாக்த தெய்வமான சக்தியை கௌரி என்ற வடிவில் விரதிருந்து விரதமிருப்பதாகும். பல்வேறு விரத தினங்கள் இந்த கௌரி விரதங்களில் காணப்படுகிறது.
பிருகத் கவுரி விரதம்
தொகுபாத்ரபத மாத தேய்பிறை திரிதியையில் விரதமிருந்து உமையை வணங்குதலாகும். [1]
கதலி கவுரி விரதம்
தொகுவாழை மரத்தின் கீழ் உமையான கௌரியை பிரதிஸ்டைச் செய்து வழிபடுதல் மற்றும் விரதமிருத்தல். [2]
யோக கவுரி விரதம்
தொகுபாத்ரபத மாதத்து பௌர்ணமி நாளில் விரதமிருந்து பார்வதியை யோக கவுரியாக வணங்குதல்.[3]
அமிர்த கவுரி விரதம்
தொகுஆஷாட மாதத்தில் இந்த அமிர்த கவுரி விரத நாள் வருகிறது. இந்நாளில் பார்வதி தேவியை விரதமிருந்து வழிபடுகின்றனர். அவ்வாறு வழிபட்டால் வாழ்நாள் கூடுமெனவும், அமர்தம் போல வாழ்க்கை செழிக்கும் எனவும் நம்புகின்றனர். [4]
சொர்ண சோடச கவுரி விரதம்
தொகு16 வகையா வடிவங்களை உடைய உமாதேவியை பிரதிஷ்டை செய்து வழிபடும் நாளாகும். [5]
பணில கவுரி விரதம்
தொகுபணில கவுரி விரதம் என்பது கருட பஞ்சமி நாளில் கௌரியை வழிபடும் விரதமாகும். இந்த விருதத்தினை பத்து வருடங்கள் தொடர்ந்து செய்தால் எல்லா வகையான கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தினைப் பற்றி விரத கல்ப சிந்தாமணி எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. [6] வாழை இலையின் மீது அரசியைப் பரப்பி, அதன் நடுவே வெள்ளி அல்லது தாமிரத்தாலான பாம்பின் உருவத்தினை வைப்பார்கள். இலையின் நடுப்பகுதியில் பாம்பின் பின்பு கௌரியை மஞ்சளில் பிடித்து வைக்கின்றனர். பிறகு கௌரியை பாம்புடன் வழிபடுகின்றனர். [7]