க. சுப்பு
க. சுப்பு (K. Suppu) ஓர் தமிழக அரசியல்வாதியும் முன்னாள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினருமாவார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மாணவர்தலைவராக துவங்கிய சுப்பு அக்கட்சியின் சார்பில் 1971ஆம் ஆண்டு இராசபாளையத்திலிருந்து தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2] பின்னர் தி.மு.கவில் இணைந்து 1977ஆம் ஆண்டில் வில்லிவாக்கத்திலிருந்து வெற்றி பெற்றார்.[3] சட்டப்பேரவையில் எதிர்கட்சி உறுப்பினராக கடும் வாதங்களை முன்வைத்ததால் பரவலாக அறியப்பட்டார். அக்கட்சியிலிருந்து காங்கிரசு கட்சிக்கு மாறிய சுப்பு 1991ஆம் ஆண்டில் அக்கட்சியின் வேட்பாளராக சென்னைத் துறைமுகம் தொகுதியில் திமுக தலைவர் மு. கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.[4] 2001ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்து பின்னர் 2007ஆம் ஆண்டு திமுகவிற்கே திரும்பினார்.[5]
உடல்நிலைக்காரணமாக தமது 70வது அகவையில் அக்டோபர் 29,2011 அன்று இயற்கை எய்தினார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2011-10-30.
- ↑ Mr.K.Suppu., Ex.MLA, Founder of Veerapandia Panpattu Kazlagam[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Tamil Nadu Assembly Election 1977
- ↑ Chennai Harbour (State Assembly Constituency)1991 Election results
- ↑ திமுக முன்னாள் எம்எல்ஏ க சுப்பு மரணம் சென்னை ஆன்லைன்
- ↑ "DMK's 'Idi' K. Suppu no more, The Hindu". Archived from the original on 2011-10-31. பார்க்கப்பட்ட நாள் 2011-10-30.