க. பாலேந்திரா
க. பாலேந்திரா இலங்கையில் மேடை நாடக துறையின் வளர்ச்சியில் முக்கிய கலைஞர், நாடக இயக்குநர், தமிழ் அவைக்காற்று கழகத்தின் நிறுவகர்.
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுயாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாக கொண்டவர்.அங்கு வருடா வருடம் நிகழ்ந்து வரும் சுதேசிய விழா நாடகங்கள் ஆரம்ப அனுபவங்கள். 1972 இல் கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தில் பயின்றபோது பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான நுட்பம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் சங்கத்தலைவராகவும் இருந்தபோது கலைஞர்கள், அறிஞர்களுடன் ஏற்பட்ட தொடர்புகள் அவரது சீரிய நாடக பயணத்திற்கு அடிகோலின. கல்வி சார்ந்து பொறியியல் துறையில் முழுநேரத் தொழில் செய்து கொண்டு நாடகமே முழுமூச்சாக இயங்கிய அவர் நாடகத்துறை சார்ந்த ஆனந்தராணி இராஜரட்ணம் அவர்களை மணம்புரிந்து நாடகப் பயணத்தைத் தொடர்ந்தார்.
கலைப் பயணம்
தொகுசுகைர் ஹமீட் அவர்களின் ஏணிப்படிகள் என்ற குறியீட்டு நாடகத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்ததன் மூலம் இலங்கை நாடக ஆர்வலருக்குத் தெரியவந்த அவர் தாசீசியஸ் அவர்களின் நெறியாள்கையில் பிச்சை வேண்டாம், கந்தன் கருணை போன்ற நாடகங்களில் பங்குகொண்டார். இவர்களுக்கு வேடிக்கை, கிரகங்கள் மாறுகின்றன, தூரத்து இடிமுழக்கம் ஆகிய நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்தார். 1976இல் கொழும்பு லயன்வென்ற் அரங்கில் மேடையேறிய இந்திரா பார்த்தசாரதியின் 'மழை' நாடகமே இவர் முதன்முதல் தயாரித்து நெறியாள்கை செய்த நாடகம். இதில் இவரும் ஆனந்தராணியும் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். இலங்கையின் எல்லாபகுதிகளிலும் ஈழத்தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் மேடையேறியதோடு சென்னையிலும் 2010இல் மேடையேறியது குறிப்பிடத்தக்கது.மழை, அரையும் குறையும், கண்ணாடி வார்ப்புகள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியதுடன் கண்ணாடி வார்ப்புகள் ரூபவாகினியிலும் ஒளிபரப்பாகியது. தமிழ் அவைக்காற்றுகைக் கழகத்தை உருவாக்கி இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் 62க்கு மேற்பட்ட நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றிய இவர் எந்த கொள்கை கோட்பாடுகளுக்கும் ஆட்பட்டுவிடாமல் நாடகமே மூச்சாக கொண்டு நாடகத்தின் வளர்ச்சியில் தனது காத்திரமான விசாலமான பங்களிப்பை செலுத்தியிருக்கின்றார்.
நெறிப்படுத்திய நாடகங்கள்
தொகுமுதல் 23 நாடகங்கள் இலங்கையிலும் 23-62 வரையிலாட நாடங்கள் புலத்திலும் நெறியாள்கை செய்தார்.
- இவர்களுக்கு வேடிக்கை -1974
- கிரகங்கள் மாறுகின்றன -1974
- தூரத்து இடி முழக்கம் - 1976
- மழை - 1976
- பலி -1978
- நட்சத்திரவாசி -1978
- ஒரு யுகத்தின் விம்மல் - 1978
- கண்ணாடி வார்ப்புகள் - 1978
- பசி - 1978
- புதிய உலகம் பழைய இருவர் -1978
- ஒரு பாலை வீடு- 1979
- இடைவெளி -1979
- யுகதர்மம் - 1979
- நாற்காலிக்காரர் -1979
- முகமில்லாத மனிதர்கள் -1980
- திக்கு தெரியாத காட்டில் - 1980
- இயக்க விதி -3 -1980
- சுவரொட்டிகள் -1980
- சம்பந்தம் - 1980
- அரையும் குறையும் -1981
- மூன்று பண்டிதர்களும் காலம் சென்ற ஒரு சிங்கமும் -1981
- துக்ளக் -1982
- மரபு -1982
- வார்த்தையில்லா நாடகம் 1983
- பார்வையாளர்கள் 1985
- எரிகின்ற எங்கள் தேசம் 1985
- வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்கள் -1991
- பாரத தர்மம் -1991
- பிரத்தியேகக்காட்சி -1991
- தரிசனம் -1991
- தப்பி வந்த தாடி ஆடு -1992
- துன்பக் கேணியிலே -1992
- நம்மைப் பிடித்த பிசாசுகள் -1993
- இரு துயரங்கள் -1993
- ஐயா இலெக்சன் கேட்கிறார் -1994
- போகிற வழிக்கு ஒன்று -1994
- மலைகளை அகற்றிய மூடக்கிழவன் -1996
- ஆற்றைக் கடத்தல் -1996
- எப்போ வருவாரோ -1997
- அயலார் தீர்ப்பு - 1997
- அவசரக்காரர்கள் -1997
- மெய்ச்சுடரே - 1997
- பெயர்வு - 1998
- ஒரு பயணத்தின் கதை -1998
- பரமார்த்த குருவும் சீடர்களும் - 1999
- பார்வைக் கோளாறு - 2000
- காத்திருப்பு -2001
- வேருக்குள் பெய்யும் மழை -2002
- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - 2003
- அவன் அவள் - 2003
- திக்கற்ற ஓலம் - 2003
- பெருங்கதையாடல் -2004
- அரசனின் புத்தாடை -2004
- சர்ச்சை - 2006
- மலைகள் வழிமறித்தால் - 2006
- பாவி? - 2007
- எல்லாம் தெரிந்தவர்கள் - 2008
- மரணத்துள் வாழ்வு - 2009
- படிக்க ஒரு பாடம் - 2009
- ஒற்றுமை -2010
- இது ஒரு நாடகம் -2010
- தர்மம் -2010
நூல்கள்
தொகு- யுக தர்மம் - நாடகமும் பதிவுகளும் 2017
- கண்ணாடி வார்ப்புகள் -நிர்மலா நித்தியானந்தன், மல்லிகா இராஜரண்டம் ஆகியோருடன் இணைந்து 2013
- பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள் 2021
- பாலேந்திராவின் நேர்காணல்கள் 2023