க. பெருமாள் (எழுத்தாளர்)

க.பெருமாள் வட ஆற்காடு மாவட்டம் வெள்ளையகவுண்டனூரில் 05-12-1922இல் பிறந்தார். இவரது பெற்றோர் கவுண்டப்பர்-சென்னாம்மாள் ஆவர்.

இளமையும் கல்வியும் தொகு

இவர் தமது சொந்த ஊரில் தொடக்கக் கல்வியைக் கற்றார். எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைத் தமிழ்ப் பயின்று தேர்ச்சிப் பெற்றார். இவர் கல்லூரிக் கல்வியில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்று, லாசரஸ் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். [1]

ஆற்றிய பணிகள் தொகு

கோவை பூ.சா.கோ. கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். பல அரசு கல்லூரிகளில் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

எழுதிய நூல்கள் தொகு

இவர் கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

  • இன்ப வெள்ளம் [2]
  • மாபெரும் அறம் [3]
  • நல்லுலகம்
  • பெரிய வெற்றி [4]
  • நிலைத்த உண்மை
  • ஆணவத் திருவிளையாடல் [5]
  • பெரிய இன்பம்
  • இமயத்தில் இந்திரா [6]
  • அருள் வெள்ளம்

'பெரிய இன்பம்' எனும் நூல் 1979ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நாடக நூலுக்கான முதல் பரிசைப் பெற்றுள்ளது. [7] 'ஆணவத் திருவிளையாடல்' எனும் நூல் ஆணவத்தை வளர்ப்பவர்கள் ஆணவத்தாலேயே அழிவார்கள் என்பதை விளக்குகிறது.[8] 'பெரிய வெற்றி' எனும் நூல், வீட்டுக்கொரு மரம் வளர்க்க வேண்டும் என்பதைக் கூறுகின்றது. இவர் ஆங்கிலக் கவிதைகள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். [9]

மறைவு தொகு

இவர் தமது 65 ஆம் வயதில் 26-11-1986 அன்று மறைந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. பெ.தமிழ்ச்செல்வி, 'பேராசிரியப் பெருந்தகை க.பெருமாள்' பக்கம்-2
  2. கன்னிமாரா பொது நூலகம்[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Tamil Virtual University
  4. Tamil Virtual University
  5. கன்னிமாரா பொது நூலகம்[தொடர்பிழந்த இணைப்பு]
  6. கன்னிமாரா பொது நூலகம்[தொடர்பிழந்த இணைப்பு]
  7. www.wikipedia.org தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூலுக்கான பரிசுகள்
  8. பெ.தமிழ்ச்செல்வி, 'பேராசிரியப் பெருந்தகை க.பெருமாள்' பக்கம்-30
  9. மது.ச.விமலானந்தம், 'தமிழ் இலக்கிய வரலாற்றுக்களஞ்சியம்' பக்கம்-79
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._பெருமாள்_(எழுத்தாளர்)&oldid=3752782" இலிருந்து மீள்விக்கப்பட்டது