க. மா. தியாகராஜன்
க. மா. தியாகராஜன் (K.M. Thiagarajan, 1945-2007)என்னும் கருமுத்து மாணிக்கம் தியாகராஜன் ஒரு இந்தியத் தொழிலதிபர். மைக்ரோகிரிடிட் பவுண்டேசன் ஆப் இந்தியா -வின் நிறுவனர், தலைவர். [1]
வாழ்க்கைக் குறிப்பு
தொகுமதுரை கருமுத்து தியாகராஜன் செட்டியாரின் மகன் வழிப் பேரனான இவர் மதுரையில் பிறந்தவர். இவரது தந்தை கருமுத்து தி. மாணிக்கம். சென்னை கிருத்துவக் கல்லூரி பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலைப் பட்டமும், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் அதே துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.
பணிகள்
தொகுரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக இரு ஆண்டுகள் (1968-70) பணி செய்தபிறகு இந்தியா திரும்பியவர், லாயல் நூற்பாலையின் இயக்குநராகவும், லாயல் குழும நிறுவனங்களின் தலைவராகவும் பொறுப்பேற்றார். அத்துடன் பல்வேறு நிறுவனங்களின் இயக்குநராகவும் இருந்தார்.
வகித்த பதவிகள்
தொகு- மதுரை வங்கியின் தலைவர்.
- தலைவர்- சென்னை நிர்வாகக் கழகம்.
- இந்திய ஹங்கேரி வர்த்தகக் குழு,
- நிர்வாகக் குழு உறுப்பினர், அசோசேம் அமைப்பு மேம்பாட்டு மையம், ஐதராபாத், 'சிட்ரோ' கோவை.[2]
குறிப்புகள்
தொகு- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/km-thiagarajan-passes-away/article1784581.ece
- ↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்29