சகலாகம சாரம்
சகலாகம சாரம் என்னும் நூல் 15ஆம் நூற்றாண்டில் தோன்றியது. ஆசிரியர் களந்தையார் என்று போற்றப்பட்ட தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் களந்தை ஞானப்பிரகாசர். இவர் மறைஞான சம்பந்தரின் குரவர். நூல் குறட்பாக்களால் ஆனது. மேற்கோள் பாடல்களாகச் சில பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளன.
சகலாகம சார சங்கிமம் என்னும் வடமொழியில் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. ஆகம சாரத்தைச் சிவபெருமான் பார்வதிக்குச் சொன்ன செய்திகள் அதில் கூறப்பட்டுள்ளன. தமிழ்நூல் சகலாகம சாரம் வடமொழி நூல் சகலாகம சார சங்கிரமத்தின் மொழிபெயர்ப்பு ஆகலாம்.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005