சமவுரிமைப் பகிர்வு பிணையம்

(சகா-சகா (கணினியியல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சகா-சகா (Peer-to-Peer) என்பது பரவல் கட்டமைப்பைக் கொண்ட கணினி பிணையமாக்கம் ஆகும். இந்தப் பிணையத்தில் ஒவ்வொரு கணினியும் சம உரிமைகளைக் கொண்ட சகாவாக இணைக்கப்படுகிறது. சகாக்களின் வளங்கள் பிணையத்தில் ஒன்றாக சேர்க்கப்படுகின்றன. சகாக்களுக்குத் தேவைப்படும் பணிகளும் சமமாக சகாக்களிடம் பிரிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.