சகுந்தலா நாயர்

இந்திய அரசியல்வாதி

சகுந்தலா நாயர் (Shakuntala Nayar)(பிறப்பு 1926) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதீய ஜனசங்கத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1926இல் தேராதூனில் பிறந்தார். முசோரியில் உள்ள வைன்பெர்க் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பினை முடித்தார். 1946ஆம் ஆண்டு அரசு குடிமை ஊழியரான கே.கே.நாயரைத் திருமணம் செய்து கொண்டார். சகுந்தலா நாயர் 1962 முதல் 1967 வரை உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். மூன்று முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1952ஆம் ஆண்டு இந்து மகா சபா உறுப்பினராகவும், 1967 மற்றும் 1971 இல் கைசர்கஞ்சியிலிருந்து பாரதீய ஜன சங்கத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Members Bioprofile". 164.100.47.132. 1946-04-20. Archived from the original on 2014-05-02. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகுந்தலா_நாயர்&oldid=3552573" இலிருந்து மீள்விக்கப்பட்டது