சகுரிகாவா அணை
சகுரிகாவா அணை (Sagurigawa Dam) சப்பான் நாட்டின் நீகாட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. பாறைகள் நிரப்பப்பட்டு கட்ட்டப்பட்ட வகை அணையாக 119.5 மீட்டர் உயரமும் 419.5 மீட்டர் நீளமும் கொண்டதாக சகுரிகாவா அணை கட்டப்பட்டுள்ளது. மலைகளின் குழுவான சினனோகாவா ஆற்றின் துணை நதியில் அணை கட்டப்பட்டது. அணையின் நோக்கம் ஆற்றில் இருந்து வரும் நீரைப் பயன்படுத்துவதும், வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பதும் ஆகும்.[1] முக்கியமாக வெள்ளத்தடுப்பு, நீர்பகிர்மாணம், மின் உற்பத்தி பயன்பாட்டுக்காக அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 76.2 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும் போது இதன் பரப்பளவு சுமார் 76 எக்டேர்களாகும். 27500 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1993 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[2]
சகுரிகாவா அணைSagurigawa Dam | |
---|---|
அமைவிடம் | நீகாட்டா, சப்பான் |
புவியியல் ஆள்கூற்று | 37°03′14″N 139°00′03″E / 37.05389°N 139.00083°E |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sagurigawa Dam:Minami Uonuma City|Snow Country". snow-country.jp. பார்க்கப்பட்ட நாள் 2020-01-09.
- ↑ "Sagurigawa Dam [Niigata Pref.]". damnet.or.jp. பார்க்கப்பட்ட நாள் 2 November 2019.