சகு (நேபாள உணவு)

சகு (ஆங்கிலம்: Chaku; நேபாளி: चाकु) கரும்புச் சாறு, வெல்லம், நெய் மற்றும் பருப்பு பயன்படுத்தித் தயாரிக்கப்படும் நெவாரி உணவு வகையாகும். இந்தக் கலவையானது திடமான வடிவமாக வரும் வரை வேகவைக்கப்பட்டு, பின்னர் கொக்கியில் இழுத்து மிட்டாயாகச் சிறிய உருளை அல்லது அதை ஒரு வட்டத் தட்டில் விட்டு ஆறிய பின்னர் சிறிய வைர வடிவத் துண்டுகளாக வெட்டி பரிமாறப்படுகிறது. சக்குவை தனித்தனியாகவோ அல்லது யோமரியுடனோ சாப்பிடலாம்.

சகு
சகு

மகே சங்கராந்தி பண்டிகையின் போது நேபாள மக்கள் நெய் மற்றும் கிழங்குகளுடன் சகுவினை பரிமாறுகிறார்கள்.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகு_(நேபாள_உணவு)&oldid=3892323" இலிருந்து மீள்விக்கப்பட்டது