சகேயு

யூத கிறிஸ்தவ சீடர் மற்றும் அப்போஸ்தலன்

சகேயு (Zacchaeus, sometimes spelled Zaccheus ; பண்டைக் கிரேக்கம்Ζακχαῖος , Zakkhaîos ; எபிரேயம்: זכי‎ , "தூய்மையான, அப்பாவி") [1] என்பவர் விவிலியத்தில் குறிப்பிடப்படும் எரிக்கோவில் இருந்த ஒரு தலைமை வரித் தண்டலர் ஆவார். இயேசுவைப் பார்ப்பதற்காக அத்திமரத்தில் ஏறிய ஆர்வத்திற்காகவும், தன் சொத்தில் பாதியை ஏழைகளுக்கு கொடுத்த பெருந்தன்மைக்காகவும் இவர் முதன்மையாக அறியப்படுகிறார். [2] வரித் தண்டலர்களை துரோகிகள் (யூத சமூகத்துக்கு ஏதும் செய்யாமல் ரோமானியப் பேரரசுக்காக வேலை செய்தவர்கள்), ஊழல்வாதிகள் என்று மக்கள் அவர்களை மக்கள் இகழ்ந்து வெறுத்தனர். இவரது கதை லூக்கா நற்செய்தியில் காணப்படுகிறது. [3]

Painting showing Jesus holds up his hand to call Zacchaeus down from the tree while a crowd watches
நீல்ஸ் லார்சன் ஸ்டீவ்ன்ஸ் வரைந்த சகேயு . மரத்தின் மேலே உள்ள சகேயுவை இறங்கிவருமாறு இயேசு அழைக்கிறார்.
Stained glass rendition of Zacchaeus receiving Jesus into his house.
இசுவுடன் சகேயு , நல்ல மேய்ப்பர் தேவாலயம், எரிக்கோ

சாம்பிராணியின் இலபம் தரும் உற்பத்தியும், ஏற்றுமதி மையமுமாக எரிகோ நகரம் இருந்ததால், இவரது பதவிக்கு முக்கியத்துவம் வாய்ந்தாகவும், செல்வம் ஈட்டக்கூடியதாகவும் இருந்திருக்கும். [4] இவர் குறித்த குறிப்பில், யெருசலேமுக்குச் செல்லும் இயேசு எரிகோ நகரின் வழியாகச் செல்கிறார் என்ற தகவலை சகேயு அறிந்தார். இயேசுவை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவராக சகேயு இருந்தார். இயேசுவைச் வரும் வழியில் முன்னதாகவே இவர் வந்து சேர்ந்தார். இவர் உயரம் குறைவானவராக இருந்ததால், கூட்டத்தினால் இயேசுவைக் காண முடியவில்லை ( லூக்கா 19 :3). இதனால் சகேயு முன்னோக்கி ஓடிச் சென்று, இயேசு வரும் பாதையில் இருந்த ஒரு அத்திமரத்தில் அவரைக் காண்பதற்காக ஏறிக் கொண்டார். இயேசு அந்த இடத்தை அடைந்ததும், நின்று அத்திமரத்தை அண்ணாந்து பார்த்து சக்கேயுவின் பெயரைச் சொல்லி, கீழே இறங்கி வரும்படி அழைத்தார். ஏனென்றால் இயேசு இவரது வீட்டிற்குச் செல்ல விரும்பினார். ஒரு சமய போதகர்/தீர்க்கதரிசியான இயேசு, ஒரு பாவியின் வீட்டில் விருந்தினராக செல்லவிருப்பதைக் கண்டு கூட்டம் அதிர்ச்சியடைந்தது. மகிழ்ச்சியில் தன் வீட்டிற்கு இயேசுவை அழைத்துச் சென்ற இவர் "என்னுடைய ஆஸ்தியில் பாதியை இப்போதே ஏழைகளுக்கு நான் கொடுக்கப்போகிறேன்; நான் யாரிடமாவது அநியாயமாக பணம் வாங்கி இருந்தால் அதை நான்கு மடங்காக திருப்பித் தருகிறேன்" என்றார். இதைக் கேட்ட இயேசு "இன்றைக்கு இவருடைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு இந்த வீட்டுக்கு மீட்பு வந்தது" என்றார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Milligan, Jim. "Lexicon :: Strong's G2195 - Zakchaios". Blue Letter Bible. Sowing Circle.
  2. Warfield, Benjamin Breckinridge. "Jesus' Mission, According to His Own Testimony". Monergism. CPR Foundation.
  3. Luke 19:1-10:KJV
  4. Morris, Leon. Luke: An Introduction and Commentary. Wm. B. Eerdmans, 1988. p. 297.
  5. "திருவிவிலிய கதை: யேசுவின் அருளைப் பெற்ற சகேயு". Hindu Tamil Thisai. 2023-06-15. பார்க்கப்பட்ட நாள் 2023-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகேயு&oldid=3741641" இலிருந்து மீள்விக்கப்பட்டது