சகோதரிகள் தீவு

சகோதரிகள் தீவு, சிங்கப்பூரின் தெற்கில் அமைந்து இருக்கும் இரண்டு தீவுகலாகும். முதல் தீவான புலாவ் சுபர் லவுத், 9.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய சகோதரியின் தீவாகும். புலாவ் சுபர் தராத் என்று அழைக்கப்படும் இரண்டாவது தீவானது 4.2 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த இரண்டு தீவுகளும் ஒரு சிறிய இடைவெளியில் உள்ளன. இந்த இடைவெளியில் கடலில் நீரோட்டம் அதிகமாக உள்ள காரணத்தால் இங்கு நீந்துவது ஆபத்தானதாகும்.

புராணக்கதை

தொகு

முன்பு இங்கு வாழ்த்து வந்த ஒரு விதவையின் இரண்டு மகள்களே இந்த தீவாக கூறுகின்றனர். சிலர் அவர்கள் குளிக்கும் பொழுது ஒருவர் சிக்கிக்கொள்ள மாற்றவர் அவளை காப்பாற்ற முயன்று இருவரும் இறந்து பின் தீவாக ஆனதாக கதை உண்டு. சிலர் புயலில் சிக்க இருவரும் ஆளுக்கு ஒரு தீவில் கரை ஒதுங்கியதால் இந்த பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவார்.

இன்று

தொகு

அழகிய கடற்கரையை கொண்டுள்ள இந்த தீவுகள் சுற்றுலா செல்ல ஈற்ற இடங்களாகும் . பல கடல்வாழ் உயிரினங்களுடன், நீள வால் குரங்குகளும் இங்கு காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகோதரிகள்_தீவு&oldid=3910910" இலிருந்து மீள்விக்கப்பட்டது