சக்கீரி அகமது குட்டி

இந்திய அரசியல்வாதி

சக்கீரி அகமது குட்டி (Chakkeeri Ahamed Kutty) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இந்திய ஒன்றிய இசுலாமியக் கூட்டிணைவுக் கட்சியைச் சேர்ந்த இவர் ஒரு சமூக சேவகரும் ஆவார். 1973 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 02 ஆம் தேதி முதல் 1977 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 25 ஆம் தேதிவரை  கேரள அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக பணியாற்றினார். 1977 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28 ஆம் தேதி முதல் 1980 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதிவரை கேரள சட்டமன்றத்தின் அவைத்தலைவராகவும் பணியாற்றினார்.[2] 1915 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1993 ஆம் ஆண்டில் இறந்தார்.

சக்கீரி அகமது குட்டி
Chakkeeri Ahamed Kutty
குட்டிபுரம் சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிகுட்டிபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு(1993-01-04)4 சனவரி 1993
அரசியல் கட்சிஇந்திய ஒன்றிய இசுலாமியக் கூட்டிணைவு
துணைவர்சபியா
மூலம்: [[1]]

ஒன்றிய இசுலாமியக் கூட்டிணைவுக் கட்சியில் சேருவதற்கு முன்பு சக்கீரி அகமது குட்டி இந்திய தேசிய காங்கிரசின் ஊழியராக இருந்தார். இசுலாமியக் கூட்டிணைவு சட்டமன்றக் கட்சியின் செயலாளராகவும்,  செயற்குழு உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார்.[2]

சட்டமன்ற உறுப்பினர்[3]

தொகு
  • மெட்ராசு சட்டமன்றம் (1952–56)
  • 1 ஆவது கேரள சட்டமன்றம் குட்டிபுரம்
  • 3 ஆவது கேரள சட்டமன்றம் மலப்புரம் (1969 இல் இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்)
  • 4 ஆவது கேரள சட்டமன்றம் குட்டிப்புரம்
  • 5 ஆவது கேரள சட்டமன்றம் குட்டிப்புரம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Members – Kerala Legislature".
  2. 2.0 2.1 "Members – Kerala Legislature".
  3. "Members – Kerala Legislature".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கீரி_அகமது_குட்டி&oldid=3390501" இலிருந்து மீள்விக்கப்பட்டது