சக்குர்-உன்-நிசா பேகம்
சக்குர்-உன்-நிசா பேகம் (Shakr-un-Nissa Begum) அல்லது சக்குர் அல்-நிசா பேகம் (Shakr al-Nisa Begum) (இறப்பு 1 ஜனவரி 1653) ஒரு முகலாய இளவரசியும், பேரரசர் அக்பரின் மகளும் ஆவார்.[1]
சக்குர்-உன்-நிசா பேகம் Shakr-un-Nissa Begum | |
---|---|
முகலாய இளவரசி | |
பிறப்பு | பத்தேப்பூர் சிக்ரி, ஆக்ரா, முகலாயப் பேரரசு |
இறப்பு | 1 சனவரி 1653 அக்பராபாது (நவீன ஆக்ரா), முகலாயப் பேரரசு |
புதைத்த இடம் | அக்பரின் கல்லறை, சிக்கந்தரா, ஆக்ரா |
துணைவர் | சாருக் கான் மிர்சா (தி. 1594; d. 1607) |
மரபு | தைமூர் |
தந்தை | அக்பர் |
தாய் | பீபி தௌலத் சாத் |
மதம் | சுன்னி இசுலாம் |
இளமை வாழ்க்கை
தொகுசக்குர்-உன்-நிசா பேகம், முகலாயப் பேரரசர் அக்பருக்கும், அவரது மனைவி பீபி தௌலத் சாத் ஆகியோருக்கு மகளாக பத்தேப்பூர் சிக்ரியில் பிறந்தார். இவருக்கு ஆரம் பானு பேகம் என்ற இளைய சகோதரி இருந்தார்.[2]
இவர் அக்பரின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டார். மேலும் நல்ல இயல்புடையவர் மற்றும் அனைத்து மக்களிடையேயும் இரக்கமுள்ளவராக இருந்துள்ளார். ஜஹாங்கீர் இவர் மீது ஒரு நிலையான அன்பைக் கொண்டிருந்தார்.[3]
திருமணம்
தொகு1594 ஆம் ஆண்டில், அக்பர் சாருக்கான் மிர்சாவுடன் இவரது திருமணத்தை ஏற்பாடு செய்தார். இவர் படாக்சானின் சுலைமான் மிர்சா மற்றும் ஹராம் பேகம் ஆகியோரின் மகனான இப்ராகிம் மிர்சாவின் மகன் ஆவார்.[4] [5] இந்த திருமணம் செப்டம்பர் 2,1594 அன்று பேரரசி ஹமிதா பானு பேகமின் அரண்மனையில் நடந்தது.[6] பிற்காலத்தில் சாருக் முகலாயரிடமிருந்து விலகிச் சென்ற பிறகு மால்வாவின் ஆட்சியாளரானார்.[7]
1607இல் சாருக் மிர்சா இறந்தார். இரட்டையர்களான ஹசன் மிர்சா மற்றும் ஹுசைன் மிர்சா, சுல்தான் மிர்சா மற்றும் பாடி-உசு-ஜமான் மிர்சா என நான்கு மகன்களும் மற்றும் மூன்று மகள்களை விட்டுச் சென்றார்.[8]
1605 ஆம் ஆண்டில் அக்பர் இறந்த பிறகு, இவர் தனது சகோதரர் ஜஹாங்கீரிடம் சென்று ஜஹாங்கீரின் மூத்த மகனான குஸ்ராவ் மிர்சாவுக்கு உதவியாக இருந்தார். மேலும், மரியம் உசு-சமானி மற்றும் சலீமா சுல்தான் பேகம் ஆகியோருக்கும் உதவினார்.[9]
இறப்பு
தொகுசக்குர்-உன்-நிசா பேகம் ஜனவரி 1,1653 அன்று இறந்தார். சிக்கந்திராவில் அமைந்துள்ள தனது தந்தையின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டார்.[10][11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Portrait of Mirza Shah Rukh". www.rct.uk (in ஆங்கிலம்).
- ↑ Beale, Thomas William; Keene, Henry George (1894). An Oriental Biographical Dictionary: Founded on Materials Collected by the Late Thomas William Beale. W.H. Allen. p. 107.
- ↑ Jahangir, Emperor; Rogers, Alexander; Beveridge, Henry (1909). The Tuzuk-i-Jahangiri; or, Memoirs of Jahangir. Translated by Alexander Rogers. Edited by Henry Beveridge. London Royal Asiatic Society. pp. 36.
- ↑ Varma, Ramesh Chandra (1967). Foreign Policy of the Great Mughals, 1526 - 1727 A.D. Shiva Lal Agarwala. p. 49.
- ↑ Gulbadan Begum]] (1902). The History of Humayun (Humayun-Nama). Royal Asiatic Society. pp. 247, 267.
- ↑ Beveridge, Henry (1907). Akbarnama of Abu'l-Fazl ibn Mubarak - Volume I. Asiatic Society, Calcuta. p. 990.
- ↑ "Portrait of Mirza Shah Rukh". www.rct.uk (in ஆங்கிலம்).
- ↑ Jahangir, Emperor; Thackston, Wheeler McIntosh (1999). The Jahangirnama: memoirs of Jahangir, Emperor of India. Washington, D. C.: Freer Gallery of Art, Arthur M. Sackler Gallery, Smithsonian Institution; New York: Oxford University Press. pp. 303–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-512718-8.
- ↑ Xavier, Jesuit (1606). Missoes Jesuitas Na India. British Library London, MS 9854. p. 44.
- ↑ Khan, Inayat; Begley, Wayne Edison (1990). The Shah Jahan Nama of 'Inayat Khan: an abridged history of the Mughal Emperor Shah Jahan, compiled by his royal librarian: the nineteenth-century manuscript translation of A.R. Fuller (British Library, add. 30,777). Oxford University Press. p. 489.
- ↑ Kanbo, Muhammad Saleh. Amal e Saleh al-Mausoom Ba Shahjahan Nama (Persian) - Volume 3. p. 117.