சக்தி மகரிசி

(சக்தி மகரிஷி இலிருந்து வழிமாற்றப்பட்டது)


சக்தி மகரிஷி (Śakti Maharṣi)வேத கால ரிஷியான வசிட்டர்அருந்ததி இணையர்களின் மகனும், ரிஷியும் ஆவார். மகாபாரதம் கூறும் பராசர முனிவர் இவரது மகன் ஆவார். பராசரருக்கும் - மீனவப் பெண் சத்தியவதிக்கும்[1] பிறந்த வியாசர், சக்தி முனியின் பேரன் ஆவார்.

வரலாறு

தொகு

வசிட்டரின் மகன் சக்தி அடர்ந்த மலைக் காட்டில் ஒற்றையடிப் பாதை வழியாக செல்கையில், எதிரில் வந்த இச்வாகு குல மன்னன் கல்மாஷபாதன் பாதையை மறித்து நின்றதுடன், குதிரையை விரட்டும் சவுக்கால் சக்தி முனிவரை அடித்துப் பாதையை விட்டு விலகிச் செல் என அடித்தார். தன்னை ஒரு ரிஷி என்று அறிந்தும், அரக்கத்தனமாக அடித்ததால், மன்னர் கல்மாஷபாதனை நரமாமிசம் உண்ணும் அரக்கனாக மாற சாபமிட்டார் சக்தி. அப்போது அங்கு வந்த விசுவாமித்திரர், வசிட்டர் மீதான கோபத்தை, அவரது மகன் சக்தியை அழிக்கும் விதமாக ஒரு செயல் செய்தார். ஏற்கனவே சக்தியின் சாபம் பெற்ற கல்மாஷபாதனின் உடலில், விசுவாமித்திரர் ஒரு கிங்கரனை ஏவினார். எனவே கல்மாஷபாதன் சக்தி முனிவரையும், அவரது தம்பியர்களையும் கொன்று குவித்து நரமாமிசம் உண்டான்.[2] முனிவர் சக்தி இறந்த போது, 12 வயதான அவரது மனைவி அத்ரிசியந்தி கர்ப்பவதியாக இருந்தாள். சக்தியின் இறப்பிற்கு பின் பிறந்தவரே பராசரர் ஆவார்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_மகரிசி&oldid=4059258" இலிருந்து மீள்விக்கப்பட்டது