சங்கட் மோச்சன் அனுமான் கோயில்

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள இந்து கோயில்

சங்கட் மோச்சன் அனுமான் கோயில் (Sankat Mochan Hanuman Temple, Lucknow) இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள இலக்னோ நகரில் உள்ளது.[1] இந்துக் கடவுளான அனுமானுக்கு இக்கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அசுரத்கஞ்ச் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

சங்கட் மோச்சன் அனுமான் கோயில்
Sankat Mochan Hanuman Temple
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தரப் பிரதேசம்
மாவட்டம்:லக்னோ மாவட்டம்
அமைவு:இலக்னோ
ஏற்றம்:123 m (404 அடி)
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இந்து கட்டடக்கலை
இணையதளம்:sankatmochan.org

பிரமாண்டமான அனுமான் சிலையுடன் கூடிய இந்த கோவிலில் ஏராளமான பக்தர்கள், குறிப்பாக ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் திரள்கிறார்கள். இதிகாசமான இராமாயணத்தில் இருந்து காட்சியை சித்தரிக்கும் கோவிலின் சுவர்களை அலங்கரிக்கும் ஓவியங்கள் இங்கு ஈர்க்கக்கூடிய அம்சமாகும். ஏராளமான பக்தர்கள் இங்குள்ள அனுமானுக்கு கடிதங்களை எழுதுகிறார்கள், தங்கள் பிரச்சினைகளை விவரிக்கிறார்கள். இந்த கடிதங்கள் அனைத்தும் இறைவனின் தீர்வுகளையும் ஆசீர்வாதங்களையும் கோரி அவரது முன் படிக்கப்படுவதாக கூறப்படுகிறது.[2]

வரலாறு தொகு

இந்து துறவியான நீம் கரோலி பாபா இந்த கோவிலை லக்னோவில் உள்ள கோமதி ஆற்றின் கரையில் ஒரு சிறிய கோவிலாக கட்டியதன் மூலம் உருவாக்கினார். இருப்பினும், 1960 ஆம் ஆண்டில் ஒரு பெரிய வெள்ளம் இலக்னோவின் பெரும்பகுதியை கோயிலுக்கு அருகிலுள்ள பழைய பாலம் மற்றும் பழைய கோயிலுடன் சேர்த்து அடித்துச் சென்றது. சிலை மட்டும் வெள்ளத்தில் சிக்காமல் அப்படியே கிடந்தது. உத்தரப்பிரதேச அரசு, கோயிலின் கட்டுமானத்திற்காக புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் அருகே ஒரு நிலத்தை ஒதுக்கியது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Temples in Lucknow - Historical and most important temples in Lucknow City and nearby areas - Lucknow Travel Guide -Pahleaap". sites.google.com. பார்க்கப்பட்ட நாள் 2015-12-27.
  2. Srivastava, Priya SrivastavaPriya. "Sankat Mochan Hanuman Temple". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2023-07-08.
  3. "Temples in Lucknow, Mandir in Lucknow, List of Temples in Lucknow". www.lucknowonline.in. பார்க்கப்பட்ட நாள் 2015-12-27.