சங்கதி
கருநாடக இசையில் சங்கதி என்பது, ஒரு வகை இசை அணி. இது, பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட சில ஆவர்த்தனங்களை எடுத்துக்கொண்டு இராகத்தின் வடிவத்தையும், பாடலின் சொல் நயத்தையும் விளங்க வைப்பதற்காகத் திரும்பத் திரும்ப வெவ்வேறு விதமாகப் பாடுவதாகும். பாடல்களை உருவாக்கியோரே சங்கதிகளையும் தமது பாடல்களில் அமைப்பது உண்டு. அல்லது பாடகர்கள் தமது கற்பனைக்கேற்ப சங்கதிகளை அமைத்துப் பாடுவர். எடுத்துக்கொண்ட இராகத்தின் பாவத்தை விளக்குவது, பாடலின் உட்கருத்துக்களைத் தெளிவாக விளக்குவது என்னும் இரண்டு காரணங்களுக்காக சங்கதிகள் அமைக்கப்படுகின்றன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ பக்கிரிசாமிபாரதி, கே. ஏ., இந்திய இசைக்கருவூலம், குசேலர் பதிப்பகம், சென்னை, 2006. பக். 279