சங்கீதா சிரேசுதா
சங்கீதா சிரேசுதா (SangitaShrestha) நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார். திரைக்கதை எழுத்தாளராகவும் ஊடகத் தொகுப்பாளராகவும் பன்முகங்களில் இயங்குகிறார்.[1]
சங்கீதா சிரேசுதா SangitaShrestha | |
---|---|
கேஎம்ஜி வளாகத்தில் சங்கீதா சிரேசுதா | |
பிறப்பு | பிரத்நகர், நேபாளம் |
பணி | திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், ஊடகத் தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1998—முதல் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கதா பிரேம்கா, குறும் படத் தொடர்கள் |
தொழில்
தொகுசங்கீதா சிரேசுதா வானொலியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2000-2004 காலத்தில் ஒரு தொலைக்காட்சி செய்தி அலைவரிசையில் நிருபராக பணியாற்றினார். பின்னர் காந்திபூர் தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.[2] தொடர்ந்து இசை காணொளிகள் மற்றும் தொடர் குறும்படங்களை இயக்கத் தொடங்கினார்.[2][3] 70 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட காணொளிகளை இயக்கியிருந்தாலும் இவரது கதா பிரேம்கா என்ற குறும்படத் தொடர் மிகவும் பிரபலமானது.[4] பின்னர் 2016 ஆம் ஆண்டில் வெளியான கதாமா அல்கியேகா பிரேம் என்ற தொடரின் சிறு காதல் கதைகளின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டார்.[5]
2016 ஆம் ஆண்டுக்கான நேபாள அழகிப் போட்டியின் நடுவர் குழுவின் உறுப்பினராக தோன்றினார்.[6][7]
2018 ஆம் ஆண்டில், காத்மாண்டுவில் வசிக்கும் மூன்று ஆண்களின் வாழ்க்கை மற்றும் உறவுகளின் அடிப்படையில் கதா காத்மாண்டு என்ற சிறப்புத் திரைப்படத்தின் மூலம் ஓர் எழுத்தாளராகவும் இயக்குனராகவும் ஆனார்.[8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "TV personality SangitaShrestha's love story collection to hit bookstores". Kathmandu Post (in ஆங்கிலம்). 17 February 2017. பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.
- ↑ 2.0 2.1 "Tele Extravaganza!". cybersansar.com. 30 April 2010. http://www.cybersansar.com/article.php?aid=3597.
- ↑ "Stories inspired by love". The Himalayan Times. February 21, 2016 இம் மூலத்தில் இருந்து மார்ச் 11, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160311210543/http://thehimalayantimes.com/art-culture/book-review/stories-inspired-by-love/.
- ↑ "TV personality SangitaShrestha’s love story collection to hit bookstores". Nepal Khabar. February 20, 2016. http://nepalekhabar.com/2016/02/63273.
- ↑ "Shrestha’s story anthology launched". The Himalaya Times. February 20, 2016 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 29, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160229162920/https://thehimalayantimes.com/art-culture/shresthas-story-anthology-launched/.
- ↑ "Miss Nepal 2016 Archive/Judges". Miss Nepal Official இம் மூலத்தில் இருந்து 14 மே 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190514205236/https://www.missnepal.com.np/archive/2016.
- ↑ "Asmi Shrestha crowned Miss Nepal World 2016". The Himalayan Times (in அமெரிக்க ஆங்கிலம்). 8 April 2016. பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.
- ↑ "'कथाकाठमाण्डुरंगीचंगीशहरकोअँध्यारोकथा'". Setopati. https://www.setopati.com/art/interview/167691.
- ↑ Dhital, Aakriti (7 March 2017). "Katha Kathmandu goes on the floor". Kathmandu Post (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.