சங்குமுகம் கடற்கரை

சங்குமுகம் கடற்கரை இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை. இது திருவனந்தபுரம் நகரத்திற்கு மேற்கே 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மிக அருகில் இது உள்ளது. இது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலா இடமாகும்.

கடற்கரையில் உள்ள கல் மண்டபம்

நட்சத்திர வடிவிலான உணவகம் ஒன்றும் நீர்ச்சறுக்கு பயிற்றுவிக்கும் பள்ளியும் இங்கு உள்ளன.[1][2][3]

கடற்கன்னியின் பெருஞ்சிற்பம் - கடற்கரையில்

சலகன்னிகை எனப்படும் சிற்பம் ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது 35 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டது. இதைச் செதுக்கிய சிற்பி கானாயி குஞ்ஞிராமன் சென்னைக் கலைக்கல்லூரியின் பழைய மாணவராவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "SANKHUMUGHAM BEACH". District Administartion Trivandrum, GOI.
  2. "Arattu Mandapam, Shanghumugham". Kerala Tourism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-07.
  3. "Thousands offer Bali Tharpanam on Karkidaka Vavu". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்குமுகம்_கடற்கரை&oldid=3893777" இலிருந்து மீள்விக்கப்பட்டது