சங்கு சக்கரம்

மாரிசன் இயக்கத்தில் 2017இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

சங்கு சக்கரம் (Sangu Chakkaram), மாரிசனின் இயக்கத்தில், கே. சதீஸ், வி. எஸ். இராஜ்குமார் ஆகியோரின் தயாரிப்பில் 2017இல் வெளியான தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் கீதா, திலிப் சுப்பராயன்[1], என். இராஜா, பிரதீப், இராக்கி, ஜெர்மி ரோஸ்க்[2] , நிஷேஷ், மோனிகா[3] ஆகியோர் முன்னணிப்பாத்திரங்களில் நடித்துள்ளர். இத்திரைப்படம் சபீரின் இசையில், இரவி கண்ணனின் ஒளிப்பதிவில், விஜய் வேலுகுட்டியின் படத்தொகுப்பில் திசம்பர் 29, 2017இல் வெளியானது.

சங்கு சக்கரம்
இயக்கம்மாரிசன்
தயாரிப்புகே. சதீஸ்
வி. எஸ். இராஜ்குமார்
இசைசபீர்
நடிப்புகீதா
திலிப் சுப்பராயன்
என். இராஜா
பிரதீப்
இராக்கி
ஜெர்மி ரோஸ்க்
ஒளிப்பதிவுஇரவி கண்ணன்
படத்தொகுப்புவிஜய் வேலுகுட்டி
கலையகம்சினிமாவாலா பிக்சர்ஸ்
லியோ விஷன்ஸ்
தியா மூவிஸ்
வெளியீடுதிசம்பர் 29, 2017 (2017-12-29)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

 • திலிப் சுப்பராயன்
 • புன்னகைபூ கீதா
 • என். இராஜா
 • பிரதீப்
 • இராக்கி
 • ஜெர்மி ரோஸ்க்
 • நிஷேக்
 • மோனிகா
 • அபிநேத்ரா
 • ஸ்வாஸ்கா
 • கிருத்திக்
 • ஆதர்ஷ்
 • பாலா
 • ஆதித்யா
 • டெஜோ
 • அஜீஸ்
 • பிரசாந்த் ரங்கசாமி

கதைதொகு

ஒரு ஊரில் ஒரு பழமையான ஒரு மாளிகை உள்ளது. அந்த மாளிகையை தரகர் ஒருவர் விற்க முயற்சி செய்கின்றார். அந்த வீட்டில் உள்ளதாகச் சொல்லப்படும் பேயை விரட்ட மந்திரவாதிகள் இருவரை அங்கு அனுப்புகின்றார். ஒரு பணக்காரச்சிறுவனை அந்த வீட்டில் கொலை செய்துவிட்டு, அந்தச் சொத்துக்களை பறிக்க எண்ணுகிறார்கள் அந்தச்சிறுவனது காப்பாளர்கள். விளையாட இடம் தேடும் சிறுவர்கள் ஏழு பேர் அந்தப் மாளிகைக்குள் சிக்கிக்கொள்கின்றனர். அதில் ஒரு சிறுவர்களுள் ஒருனைக்கடத்தி பணம்பறிக்க எண்ணுகிறான் ஒருவன். இவ்வறாக நான்கு வேறுபட்ட குழுவினரை ஒரே இடத்தில் அந்தப் பேய் வீட்டினுள் சிக்கிக்கொள்கின்றனர். அந்தப் மாளிகைக்குள் முன்னமே ஒரு தாய், சேய் பேய்கள் உள்ளன. அந்த வீட்டினுள் சிக்கிக்கொள்ளும் பல்வேறு மனிதர்களைப் பயமுறுத்தி நகைச்சுவையை ஏற்படுத்த முயன்றுள்ளார் இயக்குநர்[4]

படப்பணிகள்தொகு

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இதற்குமுன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா[5] ஆகிய திரைப்படங்ளை தயாரித்துள்ளனர். சூலை 2017இல் வெளியிடத்திட்டமிடப்பட்ட இத்திரைப்படம் திசம்பர் 2017இல் வெளியானது[6]

இசைதொகு

இத்திரைப்படத்திற்கு சபீர்[7] இசையமைத்துள்ளார்

சான்றுகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கு_சக்கரம்&oldid=2908307" இருந்து மீள்விக்கப்பட்டது