சங்கு (நூல்)
சங்கு, ந.அதியமான் எழுதிய, அறிவியல் நோக்கில் தமிழ்ப் பழமொழிகளைக் கொண்டுள்ள நூலாகும்.[1]
சங்கு | |
---|---|
நூல் பெயர்: | சங்கு |
ஆசிரியர்(கள்): | ந.அதியமான் |
வகை: | சங்கு |
துறை: | வரலாறு |
இடம்: | தஞ்சாவூர் 613 001 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 296 + 8 |
பதிப்பகர்: | தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் |
பதிப்பு: | 2005 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
அமைப்பு
தொகுஇந்நூல் சங்கின் பெயர்களும் தொன்மங்களும், சங்கு அணிகலன்கள், அணிகலன்கள் செய்தல், சமயப் பண்பாட்டில் சங்கு, சங்கொலி, மருத்துவத்தில் சங்கு, சங்கின் பிற பயன்கள் என்ற தலைப்புகளை உள்ளிட்ட பல தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. நிகண்டுகளில் சங்கின் பெயர், இந்தியாவில் சங்கு வளையல்கள் கிடைத்த இடங்களும் காலமும், தமிழகத்தில் அகழாய்வில் கிட்டிய சங்கு அணிகலன்கள், இராபர்ட் புரூஸ் ஃபூட் கள ஆய்வில் கண்டுபிடித்த சங்குப் பொருட்கள் என்ற தலைப்பிலான அட்டவணைகளையும், இலக்கியங்களில் சங்கு, நாட்டுப்புறப் பாடல்களில் சங்கு, திருவிளையாடற்புராணத்தில் சங்குத் தொழில் குறித்த பாடல்கள் என்ற தலைப்பிலான பின்னிணைப்புகளையும் கொண்டுள்ளது.