சச்சினி ரணசிங்க

சச்சினி ரணசிங்க (பிறப்பு 1994) இலங்கையை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஆவார்.2011 ஆம் ஆண்டில் பெண் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றார். நான்கு தடவைகள் இலங்கை பெண்கள் சதுரங்க சாம்பியன்சிப் வென்றுள்ளார். (2009,2011, 2012, 2013)

சச்சினி ரணசிங்க
நாடுஇலங்கை
பிறப்பு1994
பட்டம்பெண் சர்வதேச மாஸ்டர்(2011)

வாழ்க்கை

தொகு

இவர் அபுதாபியில் பிறந்தார். சச்சினிக்கு சதுரங்க விளையாட்டை அவரது சகோதரர் சகன் ரணசிங்க அறிமுகப்படுத்தினார்.

சச்சினி இலங்கையில் அமைந்துள்ள உருசிய மையத்தில் அனத்தோலி கார்ப்போவ் சதுரங்க சங்கத்தில் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார்.[1] பல புகழ்பெற்ற சதுரங்க பயிற்சியாளர்களின் கீழ் பயிற்சி பெற்றுள்ளார். தற்சமயம் ரஞ்சித் பெர்னாந்து என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெறுகின்றார்.

சச்சினி தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். இலங்கை ஆக்னே விளம்பர தூதராகவும் பணி புரிந்துள்ளார்.

இவர் சிறுவர்களுக்கு சதுரங்க விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக ‘தும்முல மற்றும் அவரது விசித்திரமான ராணுவம்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

சாம்பியன்சிப்

தொகு
 
சச்சினி ரணசிங்க அவருடைய பயிற்சியாளர் ரன்சித் பெர்னாந்து உடன்

இவர் 2009, 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் இலங்கை பெண்கள் சதுரங்க வாகையாளராக வெற்றி பெற்றார்.[2][3][4][5] 2011 ஆசிய வலய பெண்கள் சதுரங்க வாகையாளராக வென்று பெண்கள் உலக வாகையாளர் போட்டிக்குத் தகுதி பெற்றார்.[6]

2012ல் உருசியாவில் கான்டி-மன்சியஸ்க் என்ற இடத்தில் நடைபெற்ற உலக சதுரங்க வாகையாளர் போட்டியின் முதல் சுற்றில் சீனாவை சேர்ந்த ஹூ யிபானிடம் தோற்றார்.[7]

சச்சினி இலங்கையில் பெண்கள் சதுரங்க ஒலிம்பியாடில் மூன்று தடவைகள் பங்குபற்றியுள்ளார்.[8][9][10] 2008-2009, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பெண்கள் ஆசிய அணி சதுரங்கப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-29. பார்க்கப்பட்ட நாள் 2019-01-28.
  2. http://www.lankachess.com/lankachess_tournament/SLCF/2009_Sri_Lanka_National_&_Womenns_Chess_%20Championship/Report_Sri_Lanka_National_&_Womens__Chess_%20Championship_2009.htm
  3. http://www.lankachess.com/lankachess_tournament/SLCF/2011/National_11/Final_Report_2011.pdf
  4. http://www.lankachess.com/lankachess_tournament/SLCF/2012/National/National_Report.htm
  5. http://www.lankachess.com/lankachess_tournament/SLCF/2013/National/Report.htm
  6. http://chess-results.com/tnr46530.aspx?lan=1&art=4&wi=821
  7. http://www.mark-weeks.com/chess/b2wo$wix.htm
  8. http://www.olimpbase.org/playersw/33zfldlj.html
  9. http://chess-results.com/tnr232876.aspx?lan=1&art=20&fed=SRI&flag=30
  10. http://chess-results.com/tnr368909.aspx?lan=1&art=20&fed=SRI&flag=30
  11. http://www.olimpbase.org/playerss/33zfldlj.html

வெளி இணைப்புகள்

தொகு
  • Sachini Ranasinghe பிளேயர் சுயவிவரத்தை மற்றும் விளையாட்டு Chessgames.com
  • Sachini Ranasinghe சதுரங்க விளையாட்டு 365Chess.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=சச்சினி_ரணசிங்க&oldid=3552652" இலிருந்து மீள்விக்கப்பட்டது