சஜ்ஜன் சிங் சீமா

சஜ்ஜன் சிங் சீமா இந்தியாவைச் சார்ந்த கூடைப்பந்து வீரர். 1982ல் ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் 1981,1983 மற்றும் 1985ல் நடைபெற்ற ஆசிய கூடைப்பந்து போட்டி உட்பட் பல்வேறு பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் இந்தியவின் சார்பாக விளையாடியுள்ளார். 1999ல் அர்சுனா விருது மற்றும் 1983ல் மகராசா இரஞ்சித் சிங் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1]

Sajjan Singh Cheema
நிலை{{{position}}}
உயரம்{{{height}}}
எடை{{{weight}}}
பிறப்புசனவரி 15, 1957 (1957-01-15) (அகவை 67)
Dabulian, கபுர்த்தலா
தேசிய இனம் Indian
வல்லுனராக தொழில்1976–1994

இளமைக் காலம்

தொகு

சஜ்ஜன் சிங் 1957ல் பஞ்சாப் மாநிலத்தின் கபூர்தலா மாவட்டத்தின் டபுலியன் கிராமத்தில் பிறந்தார். கபூர்தலாவில் உள்ள கர்னாலியா கல்சா உயர் நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் விளையாட்டுக் கல்லுரியில் பயின்றார்.

கூடைப்பந்து

தொகு

1976ல் கூடைப்பந்து விளையாட ஆரம்பித்தார். 1976ல் ஜெய்பூரில்  நடைபெற்ற பல்கலைகழகங்களுக்கிடையெயான போட்டியில் முதன் முதலில் பங்கேற்றார். 1994ல் விளையாட்டிலிருந்து ஓய்வுப் பெற்றார். பஞ்சாப் காவல்துறையில் எஸ் பியாகவும் லுதியானாவில் துணை கமிஷ்னராகவும்(போக்குவரத்து) பணியாற்றினார். [2]

தனிப்பட்ட வாழ்கை

தொகு

அவரது சகோதரர்கள் பல்கர் சிங், குர்மீத் சிங், மற்றும் அவரது உறவினர் குல்தீப் சிங் ஆகியோர் இந்தியாவின் சார்பாக கூடைப்பந்து விளையாடியுள்ளனர். இவரது மகள் குனீட் சிங் கவுர் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தேசிய அளவில் விளையாடியுள்ளார்.[3]

2017ல் பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக சுல்தான்பூர் லோதியில் போட்டியிட்டார்.[4]

References

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஜ்ஜன்_சிங்_சீமா&oldid=3315812" இலிருந்து மீள்விக்கப்பட்டது