சஞ்சய் காந்தி அனல் மின் நிலையம்
சஞ்சய் காந்தி அனல்மின் நிலையம் பிர்சிங்புர் இரயில் நிலையத்தில் அமைந்துள்ளது. இது உமாரியா மாவட்டம், மத்திய பிரதேசம், இந்தியாவில் அமைந்துள்ளது. இது மத்திய பிரதேச மின் உற்பத்தி கம்பெனி லிமிடெடின் நிலக்கரி அடிப்படையிலான மின்நிலையம்.
சஞ்சய் காந்தி அனல்மின் நிலையம் | |
---|---|
நாடு | இந்தியா |
இடம் | பிர்சிங்புர், உமாரியா மாவட்டம் , மத்திய பிரதேசம் (மாநிலம்). |
நிலை | செயல்பாட்டிலுள்ளது |
இயங்கத் துவங்கிய தேதி | 1993 |
இயக்குபவர் | மத்திய பிரதேச மின் உற்பத்தி கம்பெனி லிமிடெட் |
மின் நிலைய தகவல் | |
முதன்மை எரிபொருள் | நிலக்கரி |
உற்பத்தி பிரிவுகள் | 5 |
மின் உற்பத்தி விவரம் | |
நிறுவப்பட்ட ஆற்றலளவு | 1340.00 மெகாவாட் |
Source:http://mppgenco.nic.in |
மின் நிலையம்
தொகுசஞ்சய் காந்தி அனல்மின் நிலையத்தின் நிறுவப்பட்ட கொள்ளளவு 1340.00 மெகவாட். முதல் பிரிவு மார்ச், 1993ல் ஆரம்பிக்கப்பட்டது.[1] 1810 ஹெக்டேர்கள் பரப்புடைய ஜோகிலா அணையில் இருந்து இந்த மின் நிலையத்திற்கு தேவையான நீர் எடுத்துவரப்படுகிறது. தென்கிழக்கு நிலக்கரி புலங்கலிருந்து தொடர்வண்டி மூலம் நிலக்கரி இந்த மின்நிலையத்திற்கு எடுத்துவரப்படுகிறது.
Installed capacity
தொகுநிலை | தொகுதி எண் | நிறுவப்பட்ட கொள்ளளவு (MW) | ஆரம்பிக்கப்பட்ட தேதி | நிலைமை |
---|---|---|---|---|
முதலாவது | 1 | 210 | மார்ச்,1993 | செயல்பாட்டிலுள்ளது |
முதலாவது | 2 | 210 | மார்ச்,1994 | செயல்பாட்டிலுள்ளது |
இரண்டாம் | 3 | 210 | பெப்ரவரி, 1999 | செயல்பாட்டிலுள்ளது |
இரண்டாம் | 4 | 210 | நவம்பர், 1999 | செயல்பாட்டிலுள்ளது |
மூன்றாம் | 5 | 500 | ஜூன், 2007 | செயல்பாட்டிலுள்ளது |
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Sanjay Gandhi Thermal Power Plant". M.P.Power Generation Company Limited. Archived from the original on 2012-02-06. பார்க்கப்பட்ட நாள் 2012-02-05.