சஞ்சய் குமார் சிங்

இந்திய அரசியல்வாதி

சஞ்சய் குமார் சிங் (Sanjay Kumar Singh (CPI politician)) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பீகாரைச் சேர்ந்த இந்திய பொதுவுடமைக் கட்சியின் தலைவரும் ஆவார். ஆசிரியர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பீகார் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2]

சஞ்சய் குமார் சிங் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உளவியல் பேராசிரியராக பணியாற்றினார். முதன் முதலில் 2014 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 2020 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992 ஆம் ஆண்டு முதல் பீகார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் 2006 ஆம் ஆண்டு முதல் பீகார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இயங்கினார். அனைத்து இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் தேசிய செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மாணவப் பருவத்திலிருந்தே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்த இவர், பீகார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராகப் பணியாற்றினார். பீகார் பல்கலைக்கழகத்தின் ஆலோசனைக்குழு மற்றும் அதிகாரிகளின் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Eight newly-elected Bihar MLCs take oath". The New Indian Express.
  2. "Sanjay Kumar Singh(Communist Party of India(CPI)):(ELECTED FROM TEACHERS CONSTITUENCY) - Affidavit Information of Candidate". myneta.info.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_குமார்_சிங்&oldid=3784706" இலிருந்து மீள்விக்கப்பட்டது