சட்டப்பணிகள் ஆணைக் குழுக்கள் கூட்டம்
|
சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் கூட்டம் - (The Legal Services Authorities Act)
இந்திய நாடு ஜனநாயக நாடு. சமநீதியையும் இலவச சட்ட உதவிகளையும் வழங்கவது அரசின் கடமையாகக் கருதப்படுகிறது. இத்தகவலை அரசியலமைப்புச் சட்டம் 39A உறுதிப்படுத்துகிறது. இச்செயல்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்காக 26.9.1980 ஆம் ஆண்டு மத்திய அரசால் சட்ட உதவித் திட்டங்கள் அமல்படுத்தும் குழு (Committee for Implementation of Legal Aid Schemes - CILAS) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
மக்களுக்காக கடையாற்றும் உதவித்திட்டங்க்ளை நிறைவேற்றும் சட்ட உதவி அமைப்புகள் தன்னார்வ அமைப்புகளாக இருந்த காரணத்தால் இவற்றை முறைப்படுத்தி சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களை உருவாக்கம் நோக்கத்தோடு சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் சட்டம் 1987ல் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்தின் மூலமாக மூன்று சட்டப்பணி ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.
சட்டப்பணி ஆணைக்குழுக்கள் - மூன்று
1) மத்திய சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் 2) மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் 3) மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள்
மேற்கண்ட குழுக்கள் மூலம் தகுதிபெற்ற மக்களுக்கு இலவச சட்ட உதவிகளை அரசு வழங்குகிறது.