சட்டுவத்தலையன் புழு

சட்டுவத்தலையன் புழு
Bipalium kewense
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
Turbellaria
வரிசை:
Tricladida
துணைவரிசை:
Continenticola
குடும்பம்:
Geoplanidae
துணைக்குடும்பம்:
Bipaliinae
பேரினம்:
Bipalium
இனம்:
B. kewense
இருசொற் பெயரீடு
Bipalium kewense
மோசிலி, 1878

சட்டுவத்தலையன் புழு (Bipalium kewense, "பைப்பாலியம் கெவென்செ") என்பது பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பாகவும் கறுகறு எனவும் இருக்கும் ஒருவகைப் புழு. இது ஏறத்தாழ 2-3 செ.மீ நீளமும் 2-3 மி.மீ விட்டமும் கொண்ட சிறு புழுவகை. இதன் தலை தட்டையாக அரைவட்ட வடிவில் அமைந்த சட்டுவம் (சட்டாப்பை) போன்ற வடிவில் காணப்படுகின்றது. இப்புழு தென்னிந்தியாவில் காணப்படும் ஒன்று[1] இப்புழு பிற இனத்தைக் கொன்று வாழும் தட்டைப்புழுவினமாகிய தட்டைநிலப்புழு அல்லது சியோப்பிளானிடீ (Geoplanidae) எனப்படும் குடும்பத்தைச் சேர்ந்த புழுவினம். இப்புழுவினம் மண்புழுக்களை உண்ணும். இப்புழுவினம் வட அமெரிக்காவின் தென் மாநிலங்களிலும் காணப்படுகின்றது[2].

இனப்பெருக்கம்

தொகு

பைப்பாலியம் என்னும் பேரினத்தைச் சார்ந்த உயிரினங்கள் இருபாலினத் தன்மையும் கொண்டிருக்கும் (hermaphroditic). குறிப்பாக இந்தச் சட்டுவத்தலையன் புழு பாலுறுப்புத் தொடர்பால் உயிரினப்பெருக்கம் செய்ததற்கான சான்றுகள் இல்லை எனக் கருதப்படுகின்றது. பாலுறவு கொள்ளாமல் துண்டுபட்டு இனப்பெருக்கம் செய்வதாகக் கருதினாலும், பாலுறவால் முட்டையிட்டு இனப்பெருக்கம் நடப்பதற்கான அரைகுறையான சான்றுகள் உள்ளன எனக்கருதப்படுகின்றது. முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வது தொடர்புடைய இன்னொருவினமாக இருக்கலாம் என்னும் கருத்தும் உள்ளது [2].

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. Winsor, L. 1983. A revision of the cosmopolitan land planarian Bipalium kewense Moseley, 1878 (Turbellaria: Tricladida: Terricola). Zool. J. of the Linnean Soc. 79: 61-100.
  2. 2.0 2.1 Ducey, P. K., J. Cerqua, L-J West, and M. Warner. 2006. Rare egg capsule production in the invasive terrestrial planarian Bipalium kewense. Southwest Naturalist 51(2):252-254.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டுவத்தலையன்_புழு&oldid=1792952" இலிருந்து மீள்விக்கப்பட்டது