சட்ட ஆட்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சட்ட ஆட்சி என்பது ஆட்சி வரையறை செய்யப்பட்ட சட்டங்களுக்கு ஏற்ப நடைபெற வேண்டும் என்று கூறும் ஒரு கோட்பாடு ஆகும். சட்ட ஆட்சி அரசுகளின், வணிக நிறுவனங்களின், இலாப நோக்கமற்ற அமைப்புக்களின் ஒரு கூறாக அமைகிறது.
இது சட்டம் ஆட்சியாளர்களுக்கும், மக்களும், செல்வந்தர்களும், ஏழைகளும் என எல்லோருக்கும் ஒரே மாதிரியாக சட்டம் அமைய வேண்டும் என்றும் வரையறை செய்யப்படுகிறது. எனினும் சட்ட ஆட்சி என்பது சட்டங்கள் நியாமனவையா என்பது பற்றி தீர்மானிக்காமல், இருக்கும் சட்டங்கள் படி சமூகம் இயங்க வேண்ட என்ற கருத்துருவை கூடுதலாக சுட்டி நிற்கிறது. சட்டங்கள் மாற்றப் பட வேண்டுமானால் அது அந்த அந்த நாட்டு சட்டமியற்று வழிமுறைகளின் ஊடாக நிகழலாம்.