சண்டிகர் ஆளுநர் அரண்மனை

முன்மொழியப்பட்ட அரசு கட்டடம்

சண்டிகர் ஆளுநர் அரண்மனை (Governor's Palace, Chandigarh) இந்தியாவின் சண்டிகர் நகரத்தில் அமைந்துள்ள ஓர் அரசு கட்டிடமாகும். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணரும் கோர்பூசியரின் உறவினருமான பியர் சீனெரெட்டின் உதவியுடன் லு கார்பூசியரால் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டது. ஆனால் அப்போது அது கட்டப்படவில்லை.[1][2]

கட்டடத்தின் மாதிரியானது சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச்சு நகர லி கார்பூசியர் மையம் மற்றும் சண்டிகரின் 10 ஆவது பிரிவிலுள்ள அரசு அருங்காட்சியகமும் ஓவியக் கூடமும் கட்டடக்கலை அருங்காட்சியகம் ஆகியவற்றில் காட்சிக்கு வைக்கப்பட்டது. சண்டிகர் நகரின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு மாதிரி நவீன சுதந்திர இந்தியாவின் தனித்துவமான பரிசோதனை முயற்சியாகக் கருதப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Fondation Le Corbusier: "Palais du Gouverneur, Chandigarh", retrieved 20 October 2013
  2. "AD Classics: Chandigarh Secretariat", 26 September 2011
  3. "Le Corbusier Centre gets richer by 14 rare photographs". Indian Express. 2010-03-17. http://www.indianexpress.com/news/Le-Corbusier-Centre-gets-richer-by-14-rare-photographs/591736. பார்த்த நாள்: 2013-09-07. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டிகர்_ஆளுநர்_அரண்மனை&oldid=3736264" இலிருந்து மீள்விக்கப்பட்டது