சண்டிகர் ரோசா திருவிழா

சண்டிகர் ரோசா திருவிழா (Rose Festival of Chandigarh) இந்தியாவின் சண்டிகார் நகரில் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறுகிறது. சண்டிகரின் குடியிருப்புப் பகுதி பிரிவு 16 இல் 30 ஏக்கர் ப்ரப்பளவில் விரிந்துள்ள சாகிர் உசேன் ரோசா தோட்டத்தில் இந்த மலர் திருவிழா நடைபெறுகிறது. இப்பூங்கா 1967 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு முன்னாள் குடியரசுத் தலைவர் சாகிர் உசேனின் பெயர் வைக்கப்பட்டது. திருவிழா நடைபெறும் இத்தோட்டத்தில் 1,600 வகையான ரோஜாக்களின் 50,000 தாவரங்கள் உள்ளன. [1]

2018 ஆம் ஆண்டு சண்டிகர் ரோசா திருவிழா பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இசை நிகழ்வுகள், உலங்கு வானூர்தி பயணங்கள் மற்றும் நாய் கண்காட்சி[2] ஆகியவை 2018 ஆம் ஆண்டு விழாவில் இடம்பெற்றன. மேலும் முதன்முறையாக திருநங்கைகளின் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் ஓர் அரங்கும் அப்போது அமைக்கப்பட்டிருந்தது. [3]

2019 ஆம் ஆண்டு இத்திருவிழா பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வரையும், 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முதல் மார்ச்சு மாதம் ஒன்று வரையும் நடைபெற்றது. 2020 ஆம் ஆண்டு திருவிழாவை சண்டிகர் மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்தது. நெகிழி இல்லா திருவிழா என்ற மையப்பொருளில் மாநில சுற்றுலா மற்றும் கலாச்சார விவகாரத் துறை மலர் திருவிழாவை நடத்தியது.

2021 ஆம் ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்று நோய் காரணமாக மலர் திருவிழா நடைபெறவில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. "2014 Directory" (PDF). World Federation of Rose Societies. p. 194. Archived from the original (PDF) on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.
  2. "Rose Garden preps up to kick off fest tomorrow". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 22 February 2018. https://timesofindia.indiatimes.com/city/chandigarh/rose-garden-preps-up-to-kick-off-fest-tomorrow/articleshow/63020316.cms. பார்த்த நாள்: 1 March 2018. 
  3. "For the first time, Chandigarh's Rose Festival will have a stall by transgenders". இந்தியா டுடே. 23 February 2018. https://www.indiatoday.in/lifestyle/what-s-hot/story/for-the-first-time-chandigarh-s-rose-festival-will-have-a-stall-by-transgenders-1176177-2018-02-23. பார்த்த நாள்: 1 March 2018. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டிகர்_ரோசா_திருவிழா&oldid=3552714" இலிருந்து மீள்விக்கப்பட்டது