சண்முக. செல்வகணபதி

முனைவர் சண்முக. செல்வகணபதி (பிறப்பு ஜனவரி 15, 1949, திருவீழிமிழலை) தமிழ் இலக்கியங்களிலும், தமிழிசையிலும் ஆழ்ந்த புலமைபெற்று, எழுத்தாலும் பேச்சாலும் தமிழ்ப்பணி செய்து வருபவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர். திருவையாறு அரசர் கல்லூரியில் முதல்வர் பொறுப்பேற்றுத் திறம்படப் பணியாற்றிய பேராசிரியர். இலக்கியக்கூட்டங்களின் வழியாகவும், சமயச் சொற்பொழிவுகள் வழியாகவும் மக்களிடம் தம் கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் உள்ளவர். இராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் நூலினை இசைச்சித்திரமாக 15 பொழிவுகளாகத் திருச்சிராப்பள்ளி வானொலியில் வழங்கியவர் (2009 சூன் - 2009 ஆகத்து). இதுவரை 650 மேற்பட்ட மேடைகளில் இலக்கியப் பொழிவுகளாற்றியுள்ளவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் மரபு வழியாகப் பெரும் இசைக்குடும்பத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் கி. சண்முகம், குப்பம்மாள். இவர் தனது தொடக்கக் கல்வியைத் திருவீழிமிழலையிலும், புகுமுக வகுப்பைக் குடந்தை அரசு கல்லூரியிலும், பி.ஓ.எல்இ முதுகலைப் பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பயின்று தமிழ்ப்புலமையை வளர்த்துக் கொண்டவர்.

பணிகள்

தொகு

டாக்டர் வ.சுப. மாணிக்கனாரின் நாடகங்கள் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் 1987 இல் இளம் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1991 இல் ஒப்பியல் நோக்கில் பாரதிதாசன்- கார்ல் சாண்ட்பர்க்கு என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

பொழிவுகள்

தொகு

இவர் திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் 90 திருப்புகழ்ப் பொழிவுகளும், திருவீழிமிழலை ஆலயத்தில் 110 திருமுறைப்பொழிவுகளும், திருத்தவத்துறை ப.சு. நற்பணி மன்றத்தின் சார்பில் 64 திருப்புகழ் இசைவிளக்க பொழிவுகளும், திருவரங்கம் செண்பகத் தமிழ் அரங்கில் இசைத்தமிழ் அறிஞர் தொடர்ப்பொழிவும், தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவை சார்பில் இசைத்தமிழ் அறிஞர் என்ற தலைப்பில் 33 பொழிவுகளும் நிகழ்த்தியுள்ளார்.

விருதுகள்

தொகு

வெளிவந்த நூல்கள்

தொகு
  • ஒப்பிலக்கிய நோக்கில் தமிழ் இலக்கணம்
  • மொழியியல் நோக்கில் தமிழ் இலக்கணம்
  • கல்வி உளவியல் மனநலமும் மனநலவியலும்
  • தனியாள் ஆய்வு
  • வரலாற்று மொழியியல் நோக்கில் தமிழ் இலக்கணம்
  • தமிழ் மொழியியல் மைச்சுருள் அச்சு
  • தமிழிசை ஆதி மும்மூர்த்திகள், சீர்காழி அருணாசலக்கவிராயர்
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
  • மொழிபெயர்ப்பியல்
  • பாரதிதாசன் கார்ல் சாண்ட்பர்க்கு ஓர் ஒப்பியல் ஆய்வு
  • ஒப்பிலக்கிய வரம்பும் செயல்பாடும்
  • திருவீழிமிழலை திருத்தலம்
  • நன்னூல் தெளிவுரை
  • சீர்காழி மூவர்
  • தமிழ்க்கலைகள், இசைக்கலை நுட்பங்கள்(ஆறு பாடங்கள்)
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
  • அருணகிரியாரின் அருந்தமிழ் ஆளுமைகள்
  • இடைநிலைக் கல்வி நூல் தமிழ்ப்பாடம்
  • சித்தர் கருவூரார் வரலாறும் பாடல்களும்
  • பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் வாழ்வும் வாக்கும்.
  • மேனிலைக் கல்விநூல் தமிழ் ( 3 பாடங்கள்)
  • இசைத்தமிழ் அறிஞர்கள் தொகுதி 1
  • இராவ் சாகிப் தஞ்சை மு. ஆபிரகாம் பண்டிதர்
  • தஞ்சை தந்த ஆடற்கலை
  • தொல்காப்பியம் செய்யுளியல்
  • அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் திருத்தலப் பெருமை
  • கட்டளைகள் ஒதுவார் பட்டயப் படிப்பு பாட நூல்(அச்சில்)
  • தமிழிசை மூவர்- ஓதுவார் பட்டயப் படிப்பு பாடநூல்
  • திருமங்கலமும் ஆனாய நாயனாரும்(அச்சில்)
  • செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. முனைவர் மு.இளங்கோவன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்முக._செல்வகணபதி&oldid=2581504" இலிருந்து மீள்விக்கப்பட்டது