சதுரங்கக் காய்

சதுரங்கக் காய்கள் (Chess pieces) என்பன சதுரங்க விளையாட்டில் சதுரங்கப் பலகை மீது வைத்து விளையாடுவதற்கான காய்கள் ஆகும். ஆறு வகையான காய்கள் சதுரங்க விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொரு காயும் பலகையில் நகரும் முறைக்கமைய, அவற்றின் பெறுமதிகள் வேறுபடுகின்றன. இருவர் விளையாடும் இவ்விளையாட்டில் தொடக்கத்தில் ஒவ்வொருவருக்கும் பலகையில் பின்வருமாறு காய்கள் அடுக்கப்பட்டு இருக்கும்:

abcdefgh
8
a8 black rook
b8 black knight
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
e7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
d2 white pawn
e2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
சதுரங்கக் காய்களின் தொடக்க நிலை. இயற்கணிதக் குறியீடுகளைப் பயன்படுத்திக் கட்டங்கள் குறியிடப்பட்டுள்ளன.[1]
சதுரங்கக் காய்கள்
அரசன்
அரசி
கோட்டை
அமைச்சர்
குதிரை
காலாள்


மூல இசுட்டாண்டன் சதுரங்கக் காய்கள், இடமிருந்து வலமாக: காலாள், கோட்டை, குதிரை, அமைச்சர், அரசி, அரசன்

சொற்கள்

தொகு

சதுரங்கத்தில், "காய்" (piece) என்பது சூழ்நிலையைப் பொறுத்து மூன்று விதமாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

  1. இது பொதுவாக ஆறு வகைக் காய்களில் எதையும் குறிக்கக்கூடும்.
  2. விளையாட்டின்போது காலாட்களைத் தவிர பிற காய்களை மட்டுமே காய்கள் என்று குறிப்பிடுவது உண்டு. இக்காய்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது அரசியும் கோட்டையும், இரண்டாவது அமைச்சரும் குதிரையும், மற்றது அரசன்.
  3. விளையாட்டில் "வெல்லும் காய்", "தோற்கும் காய்" போன்ற பயன்பாடுகள் உண்டு. இவ்வேளைகளில் "காய்" என்பது அமைச்சர் அல்லது குதிரையையே குறிக்கும். அரசி, கோட்டை, காலாள் ஆகியவற்றை அவற்றின் பெயரைப் பயன்படுத்தி "வெல்லும் அரசி", "தோற்கும் கோட்டை" என்றவாறே குறிப்பிடுவர்.
  4. அரசி மற்றும் கோட்டைகளை பெருங் காய்கள் என்றும் அமைச்சர் மற்றும் குதிரைகள் சிறுங் காய்கள் என்றும் பொதுவாக குறிப்பிடுவதும் உண்டு.

சூழ்நிலைகளைப் பொறுத்தே காய் என்பதன் பொருள் விளக்கம் பெறுகிறது.

நகர்வுகள்

தொகு

ஒவ்வொரு காயும் பலகையில் வெவ்வேறு விதமாக நகர்கின்றது.

  • கோட்டை, வெறுமையான கட்டங்களில் முன்னோக்கியோ, பின்னோக்கியோ, இடமோ, வலமோ ஒரு நேர்கோட்டில் எவ்வளவு தூரமும் நகரக்கூடியது.
  • அமைச்சர், வெறுமையான கட்டங்களில் மூலைவிட்டத் திசையிலான நேர்கோட்டில் எவ்வளவு தூரமும் நகரலாம்.
  • அரசி, வெறுமையாக உள்ள கட்டங்களில் எந்தத் திசையிலும் வேண்டிய அளவு தூரம் நகர முடியும்.
  • அரசன், கட்டங்கள் வெறுமையாக இருந்தால் எந்தத் திசையிலும் ஒரு கட்டம் மட்டுமே நகரக்கூடும்.
  • குதிரை, 2 x 3 கட்ட அளவு கொண்ட நீள்சதுரத்தில் ஒரு மூலையில் இருந்து எதிர் மூலைக்கு நகரும். அதாவது "ட" வடிவம்.
  • காலாள் பொதுவாக முன்னோக்கி ஒரு கட்டம் மட்டுமே நகரும். விரும்பினால், முதல் நகர்வின் போது முன்னோக்கி இரண்டு கட்டங்கள் நகரச் சதுரங்க விதிமுறைகளில் வழியுண்டு. ஆனால், முன்னோக்கிய மூலைவிட்டத் திசைகளில் அடுத்த கட்டத்தில் எதிரிக்காய் இருக்கும்போது காலாள் மூலைவிட்டத் திசையில் ஒரு கட்டம் நகர்ந்து அதனை வெட்ட முடியும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா (2007). சதுரங்கம் விளையாடுவது எப்படி?. எஸ். எஸ். பப்ளிகேஷன். p. 50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788190605502.
  2. Howard Staunton (1864). The Chess-player's Handbook: A Popular and Scientific Introduction to the Game of Chess... Henry G. Bohn. pp. 2-3.
  3. Bruce Pandolfini (1993). Beginning Chess: Over 300 Elementary Problems for Players New to the Game. Simon and Schuster. pp. 17-25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780671795016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுரங்கக்_காய்&oldid=3583252" இலிருந்து மீள்விக்கப்பட்டது