சதுர்மாஸ்யம்

சதுர்மாஸ்யம் என்பது ஆடி பௌணர்மி முதல் கார்த்திகை பௌணர்மி வரையான காலமாகும். [1] இந்த காலத்தில் திருமால் பாற்கடலில் துயில் கொள்வார் என்பது நம்பிக்கை. இந்தக் காலத்தில் வருகின்ற ஏகாதசியை சயன ஏகாதசி என்று அழைக்கின்றனர். இது நான்கு மாத காலமாகும்.

இந்தக் காலத்தில் சந்நியாசிகள் விரதமிருக்கின்றார்கள். எங்கும் மூன்றுநாட்களுக்கு மேல் தங்க கூடாது என்ற விதி சந்நியாசிகளுக்கு உண்டு. இருப்பினும் திருமாலின் நடமாடும் ரூபங்களாக சந்நியாசிகள் கருதப்படுவதால் அவர்கள் இந்தக் காலங்கள் ஓரிடத்திலேயே தங்கிவிடுகிறார்கள். இந்து சமய அறிவியலின் படி இந்தக் காலம் பெருமழைக்காலமாகும். இக்காலத்தில் துறவிகள் வேறிடத்திற்கு செல்லுதல் அக்காலத்தில் பல இன்னல்களைத் தருவது என்பதால் இந்த சதுர்மாஸ்யத்தினை இந்துக்கள் உருவாக்கியுள்ளார்கள்.

சதுர்மாஸ்ய விரத சங்கல்பம்தொகு

இது சதுர்மாஸ்ய காலத்தில் ஓரிடத்திலேயே தங்கப்போகும் துறவியர்கள் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழியாகும். “வரப்போகும் மழைக்காலத்தில் புழுப்பூச்சிகள் அதிகம் உருவாகி நடமாடும். இந்நாளில் அவற்றுக்கு, அவற்றால் எனக்கோ தீங்கு ஏற்படா வண்ணம் ஓரிடத்திலேயே தங்கியிருக்கிறேன். உங்களுக்கு அசவுகரியம் என்றால் வேரிடம் செல்வேன்” என குரு கூறியதும்,. “தாங்கள் இங்கேயே தங்கலாம். தங்களுக்குத் தேவையானதை நாங்கள் செய்து தருகிறோம்” என சீடர்கள் மூன்று முறை கூறுவார்கள்.

இந்தக் காலங்களின் முதல் மாதத்தில் காயையும், பழத்தினையும் உண்ணுவதிலிருந்து தவிர்க்கின்றார்கள். இரண்டாவது மாதத்தில் பால், மூன்றாவது மாதத்தில் தயிர், நான்காவது மாதத்தில் பருப்பு வகைகள் என தவிர்த்துவிடுகிறார்கள்.

சஷீராப்தி சயன விரதம்தொகு

சஷீராப்தி சயன விரதம் என்பது கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி நாளிலிருந்து பௌவுர்ணமி வரை இருக்கின்ற விரதமாகும். [2] இந்த நாட்கள் திருமால் உறங்கும் சதுர்மாஸ்யம் காலத்தில் வருகின்றன. எனவே பசுக்களின் பூசைகளுக்கு உகந்த நாளாகும்.

ஆதாரங்கள்தொகு

  1. தினமலர் பக்திமலர் 30-07-2015 பக்கம் 2-3-4
  2. தினமலர் பக்திமலர் 23.07.2015 பக்கம் 3-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுர்மாஸ்யம்&oldid=2332537" இருந்து மீள்விக்கப்பட்டது