சத்தியவிரதன்

சத்தியவிரதன் என்பவர் திருமால் மச்ச அவதாரம் எடுத்தபொழுது அவரை காப்பாற்றியவர் ஆவார். இவரைப் பற்றி மகாபுராணங்களில் ஒன்றான மச்ச புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

சத்தியத்தினையே பேசும் படி ஆட்சி நடத்தியமையால் சத்தியவிரதன் என்று பெயர் பெற்றார். இவர் சந்தியாவந்தனம் செய்யும் வழக்கமுடையவர் என்பதால் நதியில் நீராடி அர்க்கியம் தரும்பொழுது சிறு மீனாக திருமால் கைகளுக்குள் சிக்கினார். அம்மீனை மீண்டும் ஆற்றில் விடுவதற்காக சத்தியவிரதன் எத்தனித்த பொழுது, மீனானது தன்னை காக்க வேண்டியது. அதனால் கமண்டலத்தினுள் அம்மீனை இட்டு அரண்மனை அடைந்தார். அம்மீனானது கமண்டலம் அளவு வளர்ச்சியடைந்தது, எனவே கங்காளத்தில் இட்டார். கங்களமளவு வளர்ந்ததும் ஏரியில் விட்டார். எரியின் அளவிற்கும் அம்மீன் பெரியதாக வளர்ந்தது. அதனால் அம்மீனை கடலில் விட்டார்.

அப்பொழுது திருமாலாக தோன்றிய மீனானது, ஏற்படவிருக்கும் பிரளயத்திலிருந்து அவரை காக்கவே வந்ததாக தெரிவித்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியவிரதன்&oldid=3012504" இலிருந்து மீள்விக்கப்பட்டது