சத்துணவு என்பது மனித வளர்ச்சிக்கும், வாழ்க்கை நலத்திற்கும் வேண்டிய சத்துப்பொருள்களைத் தரத்திலும் அளவிலும் போதுமானபடி கொண்டுள்ள உணவாகும். இது சீருணவு அல்லது நலம் தரும் நல்லுணவு எனப்படும்[1][2] உடலின் பல்வேறு வேலைகள் செவ்வனே நடப்பதற்குத் தேவையான சக்தியை அளிக்கவும் சீருணவு மிகவும் அவசியமாகும்.

Leafy green, allium, and cruciferous vegetables are key components of a healthy diet

உயிரானது, பல்வேறு செயல்களின் மூலமாகத் தன் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் தேய்ந்து போன உறுப்புகளைப் புதுப்பித்தலுக்கும் தேவையான சக்தியை பெற்றுப் பயன்படுத்துவதை விளக்கும் பிரிவு உணவியலாகும். உலகெங்கிலும் சத்துணவு இன்மையால், ஆயிரமாயிரம் குழந்தைகள் நோயினால் துன்புறுகின்றனர். உலகில் பெரும்பாலான குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்படும் கொடிய நோய்கள் சத்துணவுக்கல்வியின் இன்றியமையமையை வலியுறுத்திக் கூறுகின்றன.

சத்துக்குறைவால் கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல், குழந்தைகள் போதிய வளர்ச்சியன்மை, மாலைக்கண்நோய், எலும்புகள் பலவீனமாய் காணப்படுதல், இரத்தசோகை போன்ற கொடிய நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர். சரிவிகித உணவில் 1. புரதச்சத்து 2. மாவுச்சத்து 3. கொழுப்புச் சத்து 4. உயிர்ச்சத்து 5. உப்புச் சத்து 6. நார்ப்பொருள் 7. தண்ணீர் ஆகியவையடங்கும்.

புரதம், மாவு, கொழுப்புச்சத்து ஆகியவை நம் உடம்பிற்கு சக்தியைக் கொடுப்பதுடன் மற்ற சில முக்கியப்பணிகளைச் செய்கின்றன. ஆனால், உயிர்ச்சத்து மற்றும் கொழுப்புச்சத்தும் சக்தியை கொடுப்பதில்லை ஆனால் உடலின் பல முக்கிய தொழில்களை காண்காணிக்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Lean, Michael E.J. (2015). "Principles of Human Nutrition". Medicine 43 (2): 61–65. doi:10.1016/j.mpmed.2014.11.009. 
  2. World Health Organization, Food and Agricultural Organization of the United Nations (2004). Vitamin and mineral requirements in human nutrition (PDF) (2. ed.). Geneva: World Health Organization. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9241546126.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்துணவு&oldid=3620769" இலிருந்து மீள்விக்கப்பட்டது