சத்னாம் சிங் பமரா

சத்னாம் சிங் பமரா (Satnam Singh Bhamara,பிறப்பு: திசம்பர் 10, 1995) இந்திய தொழில்முறை கூடைப் பந்தாட்ட விளையாட்டாளர். இவர் என்பிஏ மேம்பாட்டுக் கூட்டிணைவில் டெக்சாசு லெஜன்ட்சு அணிக்காக விளையாடுகின்றார். என்பிஏவில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் இவராவார்; 2015ஆம் ஆண்டு டாலஸ் மேவரிக்ஸ் தேர்ந்தெடுத்த முன்வரைவு அணியில் 52ஆவது நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 7 அடி 2 அங் (2.18 மீ) உயரமும் 290 பவு (132 கிலோ) எடையும் கொண்ட[1] சத்னாம் சிங் கூடைப் பந்தாட்டத்தில் நடுவிடத்தில் விளையாடுகின்றார். புளோரிடாவின் பிராடென்டன் நகரில் உள்ள தனியார் பயிற்று நிலையமான ஐஎம்ஜி அகாதமியில் உயர்நிலைப் பள்ளிக் கூடைப்பந்தாட்டத்தை விளையாடியுள்ளார். இந்த பயிற்று நிலையத்தில் பயிற்சி பெற்று 14 அகவையிலேயே என்பிஏ அணிகளின் கவனத்தை ஈர்த்தமையால் ஊடகங்களில் பரவலாக அறியப்படலானார்.

சத்னாம் சிங் பமரா
2013இல் இந்தியத் தேசிய அணிக்கு ஆடும்போது (இடது)
2013இல் இந்தியத் தேசிய அணிக்கு ஆடும்போது (இடது)
2013இல் இந்தியத் தேசிய அணிக்கு ஆடும்போது (இடது)
நிலைநடுவம்
உயரம்7 ft 2 in (2.18 m)
எடை290 lb (132 kg)
சங்கம்என்பிஏ மேம்பாட்டு கூட்டிணைவு
அணிடெக்சாசு லெஜன்ட்சு
சட்டை எண்#52
பிறப்பு10 திசம்பர் 1995 (1995-12-10) (அகவை 29)
பல்லோ கே, பஞ்சாப், இந்தியா
தேசிய இனம் இந்தியர்
வல்லுனராக தொழில்2015–இன்று வரை

மேற்சான்றுகள்

தொகு
  1. "Satnam Singh Bhamara". ESPN. பார்க்கப்பட்ட நாள் 2015-11-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்னாம்_சிங்_பமரா&oldid=2719655" இலிருந்து மீள்விக்கப்பட்டது