சத்யேந்திர பிரசன்னோ சின்ஹா

பிரித்தானிய அரசியல்வாதி

எஸ். பி. சின்ஹா எனப்படும் சத்யேந்திர பிரசன்னோ சின்ஹா (Satyendra Prasanno Sinha, 1st Baron Sinha 1863-1928 ) பிரித்தானிய இந்தியாவின் 'ஆளுநர் செயற்குழு'வின் சட்ட உறுப்பினரான முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றவர்[1]. வங்காள அரசின் சட்ட ஆலோசகராகப் பணியாற்றியவர். இங்கிலாந்து அரசால் 'நைட்' பட்டம் பெற்ற இந்தியர். பிரித்தானிய அரசியலறிஞர்களுக்கே ஆலோசனை சொல்லக்கூடிய இந்தியர் என்ற பெருமை பெற்றவர்.

சின்ஹா பிரபு
The Lord Sinha
பிறப்புமார்ச் 24, 1863
ராய்ப்பூர்
இறப்புமார்ச்சு 5, 1928(1928-03-05) (அகவை 64)
கல்கத்தா
பணிஅரசியல்வாதி, வழக்கறிஞர்
வாழ்க்கைத்
துணை
கோவிந்த மோகினி சின்ஹா (மிட்டர்)

இளமை

தொகு

1864-ஆம் ஆண்டு வங்காளத்திலுள்ள ரெய்ப்பூர் கிராமத்தில் நிலக்கிழாராக இருந்த சீதாகண்ட சின்ஹா என்பவருக்கு இளைய மகனாகப் பிறந்தார். இளமையிலேயே செல்வக் குடும்பத்தில் பிறந்தவர் வங்காளத்தில் பிரசிடென்சி கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். சட்ட உயர்கல்வி பயில 1881-ல் இங்கிலாந்து சென்று 'பாரிஸ்டர்' பட்டம் பெற்ற சின்ஹா, அங்கேயே 1886 முதல் வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கினார். பின்னர் கொல்கத்தா வந்த சின்ஹா தனது வழக்குரைஞர் தொழிலைத் தொடர்ந்தார்.

1880 -ல் மகதத்தைச் சேர்ந்த கோவிந்த மோகினி மித்தர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் சதாரன் பிரம்ம சமாஜத்தில் (Sadharan Brahmo Samaj) இணைந்து தொண்டாற்றினர்.

பணிகள்

தொகு

மிகத்திறமை வாய்ந்த சின்ஹா 1903-ல் வங்காள அரசின் சட்ட ஆலோசகராக (Standing Counsel) நியமிக்கப்பட்டார். ஐந்தாண்டுகளில் தலைமை வழக்குரைஞராக உயர்ந்தார். 1909-ல் கவர்னர் ஜெனரல் செயற்குழுவின் சட்ட உறுப்பினராக நியமிக்க்கப்பட்டார். இந்தியப் பத்திரிக்கைச் சட்டத்தின் மீதான கருத்து வேறுபாடு காரணமாக 1910-ல் அப்பதவியிலிருந்து விலகினார். ஆனால் அரசு இவரை சமாதானப்படுத்திப் பதவியில் நீடிக்கச் செய்தது. 1896 முதல் 1919 வரை இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும் இருந்தார்.

சிறப்பு

தொகு

1914-ல் இவருக்கு இங்கிலாந்து அரசால் நைட்(Knight) பட்டம் தரப்பட்டது. 1917-ல் முதல் பிரித்தானிய அமைச்சரவையின் ஆலோசனைக் கூடத்தில் கலந்து கொண்டார். முதல் உலகப்போருக்குப் பின்னர் பாரிசில் கூட்டப்பட்ட ஐரோப்பிய அமைதி மாநாட்டில் இந்தியாவின் சார்பாக சின்ஹா கலந்து கொன்டார். அதே ஆண்டில் இந்தியாவிற்கான நாடாளுமன்ற துணைச் செயலாளராக நியமணம் பெற்றர். இப்பதவி வகித்த முதல் இந்தியர் இவரே. 1920-ல் பீகார் மற்றும் ஒரிசா முதல் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டர். தொடர்ந்து 1925-ல் பிரித்தானிய இந்தியப் பேரரசின் தனி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார்.

உசாத்துணை

தொகு

சிராசுத்தீன், 'இந்திய அரசியலமைப்பு வரலாறு', வெற்றிபதிப்பகம்.

மேற்கோள்கள்

தொகு