சத்யேந்திர யாதவ்

இந்திய அரசியல்வாதி

சத்யேந்திர யாதவ் (Satyendra Yadav) பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஒரு சமூக சேவகர். யாதவ் 2005-இல் சாப்ராவில் உள்ள ஜெய பிரகாசு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பாட்னா பல்கலைக்கழகத்தில் 2010ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.[1][2] இவர் இந்திய மாணவர் கூட்டமைப்பு பீகார் மாநிலக் குழுவின் முன்னாள் தலைவராக இருந்தார். இவர் தற்போது பீகார் மாநில சட்டப்பேரவையில் மாஞ்சி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். யாதவ் இந்தியப் பொதுவுடமைக் கட்சியை (மார்க்சிஸ்ட்) சேர்ந்தவர்.[3][4]

சத்யேந்திர யாதவ்
பீகார் சட்டமன்றம்
தொகுதிமாஞ்சி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
வாழிடம்பீகார்
வேலைஅரசியல்வாதி

2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், 43 வயதான முனைவர் சத்யேந்திர யாதவ், இந்தியப் பொதுவுடமைக் கட்சி சார்பில் மாஞ்சி தொகுதியில் போட்டியிட்டு சுயேட்சை வேட்பாளரான இராணா பிரதாப் சிங்கை 25386 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5]

தேர்தல் செயல்பாடு

தொகு

2020 சட்டப்பேரவைத் தேர்தல்

தொகு
மாஞ்சி சட்டமன்றத் தொகுதி, பீகார் (2020 தேர்தல்)
முடிவு நிலை
வ. எண் வேட்பாளர் கட்சி வாக்குகள் தபால் வாக்குகள் மொத்த வாக்குகள் % வாக்குகள்
1 ஓம் பிரகாசு பிரசாத் ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி 10040 69 10109 6.4
2 கமல் நயன் பதக் தேசியவாத காங்கிரசு கட்சி 571 20 591 0.37
3 மாதவி குமாரி ஐக்கிய ஜனதா தளம் 28855 300 29155 18.46
4 சத்யேந்திர யாதவ் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 58863 461 59324 37.56
5 சவுரப் குமார் பாண்டே லோக் ஜன சக்தி கட்சி 3680 45 3725 2.36
6 இரவி ரஞ்சன் சிங் இராச்டிரிய ஜன ஜன கட்சி 1657 15 1672 1.06
7 இராஜ் குமார் திவாரி பாரதிய ஜன் கிராந்தி தளம் (ஜனநாயக) 759 3 762 0.48
8 சேக் நௌசாத் ஆசாத் சமாஜ் கட்சி (கான்சி ராம்) 983 10 993 0.63
9 அதுல் பாஸ்கர் சுயேச்சை 882 4 886 0.56
10 வினோத் குமார் மஞ்சி சுயேச்சை 762 3 765 0.48
11 ராணா பிரதாப் சிங் சுயேச்சை 33709 229 33938 21.49
12 ராம் நாராயண் யாதவ் சுயேச்சை 1560 1 1561 0.99
13 விஜய் பிரதாப் சிங் சுயேச்சை 7348 26 7374 4.67
14 சங்கர் சர்மா சுயாதீனமான 2344 1 2345 1.48
15 சுஜித் பூரி சுயேச்சை 1354 1 1355 0.86
16 சவுரப் சன்னி சுயேச்சை 2467 2 2469 1.56
17 நோட்டா நோட்டா 900 6 906 0.57
மொத்தம் 156734 1196 157930

மேற்கோள்கள்

தொகு
  1. "Dr. Satyendra Yadav(Communist Party of India (Marxist)(CPI(M))):Constituency- MANJHI(SARAN) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
  2. "Dr. Satyendra Yadav Election Result Manjhi Live: Assembly (Vidhan Sabha) Election Results 2020 Dr. Satyendra Yadav Manjhi Seat". News18. பார்க்கப்பட்ட நாள் 2020-11-16.
  3. "Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-11-10.
  4. "Manjhi Election Result 2020 Live Updates: Dr. Satyendra Yadav of CPIM Wins". News18. 2020-11-10. பார்க்கப்பட்ட நாள் 2020-11-10.
  5. "Bihar Assembly Election Result 2020: Manjhi Assembly Constituency". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-10-27. பார்க்கப்பட்ட நாள் 2020-11-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யேந்திர_யாதவ்&oldid=3956806" இலிருந்து மீள்விக்கப்பட்டது